வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தரித்திரம் புடிச்சவன் என ஒதுக்கப்பட்ட இயக்குனர்.. கடைசியில் பாரதிராஜா கடனை தீர்த்ததே அவர்தான்

Director Bharathiraja:தமிழ் சினிமாவிற்கு 80களில் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புற கதைகளை இயக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவரிடம் உதவி இயக்குனராக இருந்து தொழிலைக் கற்றுக்கொண்டு தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர்கள் நிறைய பேர்.

அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு இயக்குனரை தமிழ் சினிமாவே தரித்திரியம் பிடித்தவர் என ஒதுக்கியவரை, பாரதிராஜா கையில் வைத்துக் கொண்டு சூப்பர் ஹிட் படத்தை இயக்கி தன்னுடைய கடனையும் தீர்த்துக் கொண்டார். 1980ல் பாரதிராஜா பீக்கில் இருந்த நேரத்தில் நிழல்கள் படம் அவருக்கு படுதோல்வி அடைந்தது.

Also Read: பாரதிராஜாவிடம் திமிர்த்தனமாய் கேட்ட வாய்ப்பு.. பெரிய பெரிய யானைகளை கவத்திய கர்வம்

இதற்குக் காரணம் அந்த இயக்குனர் தான், அவனை விட்டு விடுங்கள் என பல பேர் பாரதிராஜாவிடம் அறிவுரை வழங்கினார்கள். ஏனென்றால் அந்த இயக்குனரின் கதை தான் நிழல்கள் படத்தின் திரைக்கதை. பல பேர் சொல்லியும் அந்த இயக்குனருடன் சவகாசம் வைத்துக்கொண்டு அவருடைய கதையை இயக்கியது மட்டுமல்லாமல் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமும் படத்தை புரொடக்சன் செய்தார்.

ஆனால் பாரதிராஜாவிற்கு பெரிய கடன் சுமையை ஏற்படுத்திய படம் நிழல்கள். இந்த படத்திற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக மணிவண்ணன் பாரதிராஜாவுடன் சேர்ந்தாராம். இவர் ராசியில்லாதவர், இவர் தொட்டது துலங்காதென அனைவரும் மணிவண்ணனை வெறுத்தனர். ஆனால் அவரை வைத்து ஜெயித்து கடனை அடைத்தார் பாரதிராஜா.

Also Read: சப்பானி கமலை பார்த்து மிரண்ட 2 நடிகர்கள்.. 22 வயசுலயே உலக நாயகன் அந்தஸ்தை பெற்ற ஆண்டவர்

ஆனால் அடுத்த வருடமே மீண்டும் மணிவண்ணனின் கதையில் இயக்குனர் இமயம் இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் பாரதிராஜாவுக்கு சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் பாரதிராஜாவிற்கு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. மணிவண்ணன் இதற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிவண்ணனை ராசியில்லாத இயக்குனர் என கேலி கிண்டல் செய்தவர்களுக்கெல்லாம் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் கலெக்சன் பதிலடி கொடுத்தது. இதனால் பாரதிராஜாவும் தன்னுடைய கடனிலிருந்து மீண்டு வந்தார். அதன் பிறகும் இவர்களது கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்து தொடர் வெற்றி படங்களை கொடுத்தது.

Also Read: 80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

Trending News