கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி மக்களின் மனங்களை ஜில்லென்று ஆக்கும் ‘சில்லுனு ஒரு காதல்’ நெடுந்தொடர் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து, நடிப்பால் மக்களை கவரும் அளவுக்கு ஒரு சிறப்பான கதைக்களத்தை கொண்டதாக இந்த தொடர் இருக்கிறது.
மேலும் இந்த நெடுந்தொடரில்புதிய முகங்களான சமிர் அஹமது கதாநாயகனாகவும், தர்ஷினி கதாநாயகியாகவும் மற்றும் பல நடிகர்களும் நடித்து கலக்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் மக்களை கவரும் விதமாக வெள்ளித்திரையில் நாயகியாக வலம் வந்த மாதவி என்னும் ராஜஸ்ரீ சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
பாரதிராஜாவின் வெற்றிப்படமான ‘கருத்தம்மா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஜஸ்ரீ. வெள்ளித் திரையில் அறிமுகமாகி பின் சின்னத்திரையிலும் கங்கா யமுனா சரஸ்வதி, அகல்விளக்குகள், சித்தி 2 மற்றும் வம்சம் உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து கலக்கி வந்தவர்.
மேலும் ராஜஸ்ரீ சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல வெற்றிப் படங்களான நந்தா, ஐயனார் உள்ளிட்ட பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைய தற்போது சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து அதை நன்றாக பயன்படுத்தி வருகிறார்.
இவர் தற்பொழுது ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலிலும், சிறப்பு தோற்றமான கல்பனா தேவி என்னும் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராஜஸ்ரீ வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் உள்ள வித்தியாசத்தை திறம்பட கூறியுள்ளார்.
அதில் வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடித்தால் அது ஒருநாள் விமர்சனத்துடன் போய் விடும். ஆனால் சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் தினம் தினம் பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடுகிறது என தனது அனுபவத்தை ராஜஸ்ரீ அழகாக பகிர்ந்துள்ளார்.