ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

மானங்கெட்ட வேலையை பார்த்த வெண்பா.. கூடவே போகும் முட்டாள் பாரதி

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் இவ்வளவு நாள் பாரதியின் இரண்டு மகள்களும் அவருக்கு பிறக்கவில்லை என்று நம்ப வைத்து கண்ணம்மாவிடம் இருந்து பாரதியை பிரித்து வைத்திருக்கும் வெண்பா, தற்போது கேடுகெட்ட வேலையைப் பார்க்கப் போகிறார்.

ரோஹித் உடன் குடித்துவிட்டு தவறு செய்த வெண்பா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த குழந்தையை கலைத்து விடலாம் என வேலைக்காரி சாந்தி சொல்கிறார். ஆனால் அதற்கு மறுத்த வெண்பா, இந்த குழந்தையை வைத்து தான் பாரதியுடன் சேரப் போகிறேன் என கேவலமாக யோசிக்கிறார்.

எப்படி பாரதியின் குழந்தை அவருக்கு பிறக்கவில்லை என நம்ப வைத்தேனோ, அதேபோல அவருக்குப் பிறக்காத இந்த குழந்தை அவருடையது தான் என அந்த முட்டாள் பாரதியை நம்ப வைத்து விடுவதாகக் கூறி, இந்த விஷயத்தை அவரிடம் தெரியப்படுத்துவதற்காக வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வெண்பா பாரதியை அழைக்கிறார்.

Also Read: ஈகோவை விட்டு இறங்கி வந்த பாரதி.. இப்பயாவது ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா

பாரதியும் உடனே வருவதாகவும் அவர் கூப்பிடும் இடத்திற்கு பின்னாடியே போக கிளம்புகிறார். இந்த சீரியலில் கடந்த மூன்று வாரங்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஹாஸ்பிடலை வைத்தே  ஓடிவிட்டனர்.

அந்த சமயத்தில் போலீசுக்கு உதவி செய்த தீவிரவாதிகளை கையும் களவுமாக பிடித்ததாகவும், சென்ட்ரல் மினிஸ்டரின் ஹார்ட் ஆபரேஷன் இக்கட்டான சூழ்நிலையில் வெற்றிகரமாக முடித்து, அவருடைய உயிரை காப்பாற்றியதற்காக பாரதிக்கு பொன்னாடை போற்றி விருது வழங்கப்படுகிறது.

Also Read: கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

மேலும் பாரதி ஒரு டாக்டராக இருப்பதைவிட போலீஸ் மற்றும் ஆர்மி ஆபீஸராக இருந்து இந்த விஷயத்தில் பொது மக்களைக் காப்பாற்றி இருப்பதாக அவரை ஆஹா ஓஹோ என்று போற்றுகின்றனர். பாரதியின் மட்டுமல்ல கண்ணம்மாவையும் ‘வீரத் தமிழச்சி’ என்ற விருதை வழங்கி கௌரவிக்கின்றனர்.

இந்நிலையில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தற்போது மனதளவில் இணைந்து, விரைவில் இந்த சீரியலை முடித்து விடுவார்கள் என யூகித்தபோது, அதற்கு மாறாக வெண்பா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா பாரதிதான் என கைகாட்டி அவர்களை மறுபடியும் பிரித்து விடப் போகிறார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் சன் டிவி.. விட்டுக்கொடுக்காமல் மல்லுக்கட்டும் விஜய் டிவி

மேலும் வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு காரணமான ரோஹித்துக்கு பணத்தைக் கொடுத்து சரிகட்டி விடுவார்ர். மேலும்  வெண்பா பாரதியை தன்னுடைய கணவர் ஆக மாற்றுவதற்கு தற்போது வயிற்றில் வளரும் குழந்தையை வைத்து கேடுகெட்ட வேலையைப் பார்க்கப் போகிறார். இதனால் வெண்பாவை மட்டுமல்ல இந்த சீரியலையே சின்னத்திரை ரசிகர்கள் வெறுக்கின்றனர்.

Trending News