வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இவங்க பைத்தியமா! இல்ல நம்ம பைத்தியமானே தெரியலையே.. கிளைமாக்ஸில் கதற விடும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த சீரியலை நிறைவு செய்யும் இறுதி வாரம் என்பதால் சீரியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை கையில் வாங்கிய பாரதி, அந்த உண்மையை குடும்பத்தினரிடம் தெரிவித்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அந்த சமயம் வெண்பா ஆண்மையே இல்லாதவனுக்கு எப்படி இரண்டு குழந்தைகள் பிறக்க முடியும்? என்று அசிங்கப்படுத்துகிறார்.

Also Read: ஆண்மையே இல்லை எப்படி 2 குழந்தை பெத்துக்க முடியும்.. வெண்பா கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பாரதி

இதையே சாதகமாக வைத்துக் கொண்டு கண்ணம்மாவும் வெண்பா கேட்கும் லாஜிக்கான கேள்வி சரிதானே! பதில் சொல்லு பாரதி என நுங்கெடுக்கிறார். அதுக்கும் மேலாக பாரதிதான் அப்பா என்பதற்கு சாட்சி வேண்டும் என்றும் கேவலத்தின் உச்சத்துக்கு சென்ற வெண்பாவிற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக அடுத்தடுத்த ஆதாரம் வெளிப்படுகிறது.

முதலில் பாரதிக்கு ஆண்மை இல்லை என்ற பொய்யான ரிப்போர்ட்டை தயார் செய்த நபர், அதைத் தொடர்ந்து கண்ணம்மாவை கொலை செய்ய வெண்பா அனுப்பிய பவானி உள்ளிட்டோர் வரிசையாக வெண்பாவின் முகத்திரையை கிழிக்கின்றனர்.

Also Read: 4 வருட வெற்றி தொடருக்கு எண்டு கார்டு போட்ட இயக்குனர்.. டிஆர்பிக்கு இனி ஆப்பு தான்

கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த பிறகு பாரதியை பார்த்து வெண்பா நக்கலாக சிரிக்கிறார். இவ்வளவு நாள் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து சின்னாபின்னமாக்கிய வெண்பாவை அடித்து கொலை செய்ய துணிகிறார். இருப்பினும் குடும்பத்தினர் தடுத்து விடுகின்றனர்.

கடைசி வரையிலும் இவ்வளவு நாள் பாரதியை தலையாட்டி பொம்மை போல் ஆட்டி வைத்த வெண்பா பைத்தியக்காரி போல் சிரித்துக் கொண்டே இருக்கிறார். இப்படி கிளைமாக்ஸ் வில்லி வெண்பாவை பைத்தியக்காரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த இயக்குனரைப் பார்த்து ‘இப்போதுதான் ஒவ்வொரு சாட்சியும் வரிசையாக வந்து பாரதியிடம் உண்மையை சொல்லுமா? இதில் நீங்க பைத்தியமா! நாங்க பைத்தியமா!’ என்றும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பாரதிகண்ணம்மா சீரியலை கிழித்து கிளித்து தொங்க விடுகின்றனர்.

Also Read: மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாரதி.. அய்யயோ! இனி கண்ணம்மா பெட்டி படுக்கையை தூக்கிக்கிட்டு ஊரு ஊரா நடப்பாரே

இறுதியில் கண்ணம்மா பாரதியை மன்னித்து ஏற்றுக் கொள்வார். ஆனால் ஹேமா, லக்ஷ்மி இருவரும் தந்தையாக பாரதியை மன்னிக்க தயாராகவில்லை. கடைசியில் பாரதியை பெற்ற குழந்தைகள் வெறுத்து ஒதுக்கும் அவல நிலை ஏற்படுவது போல் இந்த சீரியலை முடிக்க போகின்றனர்.

Trending News