பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக கணவன் மனைவியாக இருக்கும் பாரதிகண்ணம்மா இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இன்னிலையில் பாரதி இவ்வளவு நாள் வளர்த்து வந்த ஹேமா கண்ணம்மாவின் மகள் என்ற விஷயம் பாரதிக்குத் தெரிந்த நிலையில், தனது மகளை தன்னிடமிருந்து பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் வேண்டுகிறார்.
அதேபோன்று லட்சுமிக்கும் பாரதிதான் அப்பா என்ற விஷயம் ஏற்கனவே தெரிந்து நிலையில், தற்போது ஹேமா தன்னுடைய சகோதரி என்பதையும் தெரிந்து கொள்கிறார். இதனால் ஹேமாவிற்காக பேரண்ட்ஸ் மீட்டிங்கில் பங்கேற்க வந்த பாரதியிடம் தனக்காகவும் ஆசிரியரை சந்திக்கும்படி கெஞ்சுகிறார்.
ஆனால் அதை செய்ய மறுக்கும் பாரதி, லட்சுமிக்காக அவளுடைய அம்மா கண்ணம்மாதான் ஆசிரியரை சந்தித்து பேச வேண்டும் என தட்டிக் கழிக்கிறார். இருப்பினும் தொடர்ந்து கெஞ்சும் லட்சுமியிடம், உன்னுடைய அப்பா அம்மா இருவரும் ஒருவர்தான் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ள முடியும்.
நான் உனக்கு மூன்றாவது ஆள் என்று பாரதி சொல்வதும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத லஷ்மி, ‘அப்பா’ என்று பாரதியை அழைத்து, என்னுடைய அப்பா நீங்கள் தான் என பாரதியை நிற்கவைத்து தனக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் போட்டுடைக்கிறார்.
அதன் பிறகு மறுபடியும் லட்சுமி தன்னுடைய ஆசிரியரிடம் அப்பாவாக பேசுங்கள் என்று பாரதியை கெஞ்சுகிறார். சந்தேகப் பேய் பிடித்து ஆடும் பாரதி பெற்றபிள்ளை இவ்வளவு கெஞ்சியும் கொஞ்சம் கூட மனம் இரங்காமல் காரில் ஏறி கிளம்புகிறார்.
அதன்பிறகு ஒரு கட்டத்தில் மனசு கேட்காத பாரதி, லட்சுமியின் முகத்திற்காக மீண்டும் பள்ளிக்கு வந்து அவரது ஆசிரியரை சந்தித்து லட்சுமியின் அப்பாவாக பேரண்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுத்தால் இந்த பிரச்சினைக்கு எல்லாம் முடிவு வந்துவிடும்.
ஆனால் அதைச் செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சீரியல் இயக்குனர் ஒருவழியாக அடுத்தடுத்து சஸ்பென்ஸை உடைத்து, சீரியலில் விறுவிறுப்பை ஏற்படுத்துவதால் சட்டுபுட்டுன்னு எண்டு கார்டு போட்டா நல்லா இருக்கும் என சின்னத்திரை ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.