கேரளத்து வரவான பாவனா தமிழ் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல், நடிகை பாவனா மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை பாவனா கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்பட தயாரிப்பாளரான நவீனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது கேரியரை நிறுத்தாமல் இன்று வரை பாவனா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருக்காக பயங்கர ரொமான்டிக்கான புகைப்படத்துடன் போஸ்ட் ஒன்றே போட்டிருக்கிறாராம்.
அதாவது பாவனாவிற்கும் நவீனிற்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறதாம். இதன் காரணமாக தான் பாவனா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தனது கணவருக்காக அழகான ரொமான்டிக் வரிகளை கொண்ட போஸ்ட் ஒன்றை போட்டிருக்கிறார்.
![Bhavana-Naveen](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/1.jpg)
அந்தப் பதிவில் பாவனா நவீனை கணவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பாவனா மற்றும் நவீன் ஆகியோரின் ரொமான்டிக் புகைப்படம் ஏகபோகமாக லைக்குகளையும் பெறுகிறது.
![bhavana-1](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/bhavana-1.jpg)