விஜய் டிவியை கலக்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் முழுவதும் கண்ணீரும் கம்பளமுமாகவே கழிந்தது. கிராமத்திலிருந்து வந்த நம்ம கிராமிய மயிலான தாமரை அக்கா, மக்களின் அனுதாபத்தையும் போட்டியாளர்களின் அனுதாபத்தையும் பெற்று போட்டியில் நீடித்து வருகிறார். திடீரென்று நேற்று தாமரை பட்டாசு போல வெடித்து தனது கோபத்தை வெளிக்காட்டினார்.
தாமரையின் இந்த கோபமான வெளிப்பாட்டிற்கு காரணம் காயின் டாஸ்கில், ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் அவரின் நாணயத்தை திருடி தன்வசம் வைத்துக் கொள்ளலாம். இதனால் சுருதி, தாமரை துணி மாற்றும் அறையில் அவரது காற்று காயினை திருடி விட்டார்.
எவ்வளவு சிரமங்களுக்கு பிறகு தாமரைக்கு கிடைத்த இந்த காயின் அவருக்கு பெரிதும் உதவும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென தன்னிடம் இருந்த காயின் காணாமல் போனதை தாமரையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன்னுடைய எதார்த்தத்தை பயன்படுத்தி பாவனி மற்றும் சுருதி இருவரும் நாணயத்தை பறித்துக் கொண்டது தாமரைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் சக போட்டியாளர்களும் தாமரைக்கு சார்பாகவே பேசினர்.
அதன்பின் இன்று நடைபெற உள்ள ‘ஊர் விட்டு ஊர் வந்த’ டாக்கில் நாள் முழுவதும் சுவாரசியம் குறையாமல் விளையாடிய இரண்டு போட்டியாளர்களாக பாவனி மற்றும் சுருதி இருவரையும் தேர்வுசெய்து அவர்களுக்கு இரவு முழுவதும் நெருப்பை அணைய விடாமல் தீ மூட்ட வேண்டும் என்ற தண்டனையை கொடுத்துவிட்டனர்.
எனவே தாமரையிடம் பாவனி மற்றும் சுருதி காயினை பெற்ற விதம் சரி இல்லை என்பதால் கோபமடைந்த போட்டியாளர்கள் அவ்வளவு சீக்கிரம் அதனை மறந்துவிட தயாராகவில்லை. இந்த வன்மம் இன்னும் தொடருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.