செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

42 வயதில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட தளபதி பட பூமிகா.. முண்டியடித்து லைக் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பூமிகா விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதேபோல் டெல்லியை சேர்ந்த பூமிகா யுவகுடு என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் பத்ரி படத்திற்கு பின்னர் ரோஜாக்கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கொடிகட்டி பறந்த பூமிகா திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

பின்னர் 2007ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்து கொண்டனர். இறுதியாக தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான யூ டர்ன் படத்தில் பூமிகா பேயாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிகாவின் ரீ என்ட்ரியை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர். தற்போது 42 வயதாகும் இவர் நீச்சல் தொட்டியில் நீந்தும் வீடியோவை போட்டு அதிர வைத்துள்ளார். இந்த வயதிலும் இளமை குறையவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

Trending News