Sandhiya Ragam Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தனத்தின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் கதிர் வெளியே வரவேண்டும். அதற்கு நாம் தான் போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆக வேண்டும் என்று முடிவு பண்ணிய ஜானகி, போலீஸிடம் நான் தான் கார்த்திகை கொலை செய்தேன் என்ற உண்மையை சொல்லி கதிரை விட்டுவிட சொல்கிறார்.
அந்த வகையில் ரகுராம் வீட்டிற்கு கதிரை விடப்போன போலீஸ், ரகுராமிடம் உண்மையான குற்றவாளி சரண் அடைந்து விட்டார். அதனால் கதிர் நிரபராதி என்று சொல்கிறார். உடனே ரகுராம் யார் கொலை செய்தார் என்று கேட்ட பொழுது ஜானகி என்று சொல்லிய நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி விட்டார்கள். ஆனாலும் இந்த கொலையை ஜானகிக்கு செய்திருக்க மாட்டா கதிரை காப்பாற்றுவதற்காக பொய் சொல்லி இருக்கிறார் என்று மொத்த குடும்பமும் நம்பி விட்டார்கள்.
அதனால் நான் முடிவு பண்ணியபடி கதிரையும் தனத்தையும் பிரித்து விடுகிறேன் என்று தனத்தை கூட்டிட்டு ரகுராம் பஞ்சாயத்திற்கு போய்விட்டார். மாயா எவ்வளவு தடுத்து பார்த்தாலும் தனம், அப்பாவிற்காக என்ன வேணாலும் செய்வேன் என்று ரகுராம் கூட பஞ்சாயத்துக்கு போய்விட்டார். இதனால் இந்த விஷயத்தை உடனே ஜானகி பெரியம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று மாயா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்.
அங்கே போனதும் தனம் எடுத்த முடிவை பற்றி ஜானகிடம் மாயா சொல்கிறார். அப்பொழுது ஜானகி ரொம்ப பீல் பண்ணிய நிலையில் இப்போது தான் புவனேஸ்வரி என்னை பார்த்துட்டு போனார். நம்முடைய குடும்பத்தை பழிவாங்க எந்த எல்லைக்கும் போவேன் என்று சொன்னார். அதனால் இதற்கு பின்னணியில் புவனேஸ்வரியின் சதி இருக்கும் என்று ஜானகி, மாயாவிடம் சொல்லி விடுகிறார்.
உடனே மாயா, உண்மையை கண்டுபிடிக்கும் விதமாக மார்ச்சுவரிக்கு போகிறார். இந்த விஷயத்தை புவனேஸ்வரி தெரிந்து கொள்கிறார். அந்த வகையில் மாயாவுக்கு தெரிந்த உண்மை வெளிவரக் கூடாது என்பதால் அடியாட்களை வைத்து மாயாவை கடத்தி விடுகிறார். பிறகு எதுவுமே நடக்காத போல் பஞ்சாயத்தில் நின்று கொண்டு தனத்தையும் கதிரையும் பிரிப்பதற்கு ஏற்பாடு பண்ணுகிறார்.
ஆனால் கடைசி நேரத்தில் இவர்களை பிரியவிடாமலும் மாயா அங்கிருந்து தப்பித்து வந்து கார்த்திக் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறார். புவனேஸ்வரி செய்த சதி என்று எல்லா உண்மையும் சொல்லி ரகுராம்க்கு புரிய வைத்து விடுவார். தன்னுடைய அவசர புத்தியால் மகளின் வாழ்க்கை வீணாக்க பார்த்தேனே என்று ரகுராம் பீல் பண்ணி மன்னிப்பு கேட்கப் போகிறார்.