வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பாலாஜியும் யாஷிகாவும் காதலர்களா.? அடித்துப் புரண்டு ஓடி வந்து பதில் கூறிய யாஷிகாவின் அம்மா.. நம்பிட்டோம்!

விஜய் டிவியில் சமீபத்தில் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக முடிவடைந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்த கன்டஸ்டன்ட் களில் ஒருவர்தான் பாலாஜி.

என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் பாலாஜியின் மவுசு குறையாததற்கு அவர் இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே சாட்சி. அதேபோல் பாலாஜி கோலிவுட்டில் இளம் நடிகராக ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் மற்றும் பாலா ஆகியோருக்கு இடையேயான உறவைப் பற்றி யாஷிகாவின் தாயான சோனல் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

bala-yashika-cinemapettai

அதாவது யாஷிகா ஆனந்த்-தும் பாலாஜியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு விஜய் டிவியின் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு நெட்டிசன்கள் பலர் யாஷிகாவிற்கும் பாலாஜிக்கும் இடையே காதல் உள்ளதாக கிசுகிசுத்து வருகின்றனர்.

மேலும் யாஷிகா இதனை பலமுறை மறுத்தும், இந்த தகவல் இணையத்தில் தீ போல் பரவி கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது யாஷிகாவின் தாயான சோனல் பிரபலமான பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

yasika-mom-cinemapettai

அந்தப் பேட்டியில் சோனல், ‘பாலாஜியும் யாஷிகாவும் அண்ணன் தங்கை போன்றவர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News