வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமல் போல் பிக் பாஸில் இருந்து விலகிய டெரர் வில்லன்.. வேலைக்காவாதுன்னு விட்டுப்போன தளபதி ஜலதரங்கன்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஏழாவது சீசன் வரை தொகுத்து வழங்கிய கமலஹாசன் இப்பொழுது இதிலிருந்து விலகிவிட்டார். ஒரு பெரும் தொகையை லாக் செய்து விஜய் சேதுபதி இப்பொழுது இதில் கமிட்டாகி தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிகளில் இந்த நிகழ்ச்சி சக்கை போடு போட்டு வருகிறது. ஹிந்தியில் நடிகர் சல்மான்கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி எல்லா மொழிகளிலும்
இந்த நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கமல் போல் பிரபல வில்லன் நடிகர் ஒருவரும் தான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். 11 ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய பிரபலம் இப்பொழுது இதிலிருந்து விலகியது அந்த தொலைக்காட்சிக்கு பெரிய இடியாக அமைந்துள்ளது. புலி, நான் ஈ போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் கிச்சா சுதீப்.

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தான் இப்பொழுது 11 ஆண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் 2013ல் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து சுதீப்தான் தொகுத்து வழங்கி வந்துள்ளார். இப்பொழுது அவர் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை தனக்கு ஆதரவு கொடுத்த கலர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், பேராதரவளித்த ரசிக பெருமக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் தன்னுடைய அடுத்த கட்ட வேலைகளை தொடர்ந்து சிறப்பிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். புலி படத்தில் தளபதி ஜலதரங்கன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர் சுதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News