வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஐஸ்வர்யா ராஜேஷை டீலில் விட்டு தவிக்கவிடும் பெரிய நடிகர்கள்.. புலம்பிக்கொண்டு விரக்தியில் எடுத்த முடிவு

Actress Aiswarya Rajesh: எத்தனையோ நடிகைகள் சினிமாவில் நடித்து வந்தாலும் அழகிய தமிழ் பேசக்கூடிய தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையை பார்க்கும் பொழுது இணை பிரியாத ஒரு சந்தோஷம் ஏற்படும். அப்படித்தான் சினிமாவிற்கு என்டரி கொடுத்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் நுழைந்ததும் அதிக கஷ்டப்பட்டாலும் தற்போது வளர்ந்த நடிகையாக இருக்கிறார்.

ஆனாலும் இவர் நினைத்தது போல் இதுவரை இவருக்கு நடக்கவே இல்லை என்று மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். அதாவது நான் சினிமாவிற்கு வந்ததிலிருந்து விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற இந்த மூன்று ஹீரோக்கள் தான் எனக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து இன்னைக்கு வரை எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

Also read:  ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் நெருக்கம் காட்டிய 4 படங்கள்.. விஜய் சேதுபதியுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த படம்

ஆனால் பெரிய ஹீரோக்கள் என்னை யாருமே கண்டு கொள்ளவில்லை. நான் எப்படி நடித்தாலும் என்னை ஏற்க மறுக்கிறார்கள். இதனால் நான் ஒரு கட்டத்தில் ரொம்பவே நொந்து போய் மனதளவில் வேதனைப்பட்டு இருக்கிறேன்.

அதனால் தான் நான் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறேன். அப்படி இதுவரை 20 படத்திற்கும் மேல் நடித்துள்ளேன். அதில் எனக்கு வெற்றியோ தோல்வியோ பரவாயில்லை. ஆனால் அந்த படத்தில் என்னுடைய நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது. அதுவே எனக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.

Also read: ப்ளாப் ஆனாலும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. போஸ்டர் ஒட்டுன காசு கூட எடுக்க முடியலையாம்

இப்பொழுது நான் நடித்த படங்களில் என்னுடைய நடிப்பு எப்படி இருக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்பொழுது கூட பெரிய நடிகர்களாக இருக்கும் பலரும் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் என்னை கண்டு கொள்ளவே இல்லை.

அவர்கள் கண்ணுக்கு நான் நடிகையாகவே தெரியவில்லை. என்னை எப்பொழுதும் டீலில் விட்டு தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படி எல்லாம் ஐஸ்வர்யா ராஜேஷ் புலம்பியதால் தான் அவர் விரக்தியில் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் இதுவும் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக பார்த்து தொடர்ந்து படங்கள் நடித்து வந்தால் இவர் எதிர்பார்க்கும் வாய்ப்பு இவரை தேடி கூடிய விரைவில் வரும்.

Also read: காசுக்காக சீப்பான வேலையை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வாயில் வயிற்றில் அடித்துக் கொள்ளும் தயாரிப்பாளர்

Trending News