தற்போது சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் பெரிய நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கின்றனர். அது அந்த திரைப்படத்திற்கு முக்கிய பலமாகவும் அமைகிறது.
அந்த வரிசையில் நடிகர் விஜய் சமீப காலமாக பிரபல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக பிரகாஷ்ராஜ் தான் விஜய் நடிக்கும் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பார். அதைத் தொடர்ந்து தற்போது பிரபல நடிகர்கள் விஜய் படங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் மாஸ்டர் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்தார். இது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
அதேபோல் விஜய்யின் கடந்த திரைப்படங்களான நண்பன், மெர்சல் போன்ற திரைப்படங்களில் சத்யராஜ், எஸ் ஜே சூர்யா போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படி பெரிய நடிகர்கள் படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது இப்படியிருக்க நடிகர் அஜித் மட்டும் தன்னுடைய திரைப்படங்களில் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க விரும்புவதில்லை. சமீபகாலமாக அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் எந்த ஒரு பெரிய ஆர்டிஸ்ட்டும் இடம் பெறுவதில்லை. திரையுலகில் இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அதாவது நடிகர் அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் அனைவரின் கவனமும் அவர் மேல் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதனால்தான் அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்டுகள் யாரும் இருப்பதில்லை. ஆனால் மற்றொருபுறம் பார்த்தால் அஜித் அனைத்து விதமான நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க சொல்வாராம்.