செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மாமாவை மலைபோல் நம்பிய அருண் விஜய்.. யானை பலத்துடன் இருந்தவருக்கு அடுத்தடுத்து விழும் அடி

ஹரி, அருண் விஜய் கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் யானை. ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, ராஜேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் ரிலீஸ் ஒவ்வொருமுறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒருவழியாக படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட்டனர். ஆனால் படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வழக்கமான திரைக்கதையில் இருந்ததால் ரசிகர்களுக்கு சற்று சலிப்பு தட்டியது.

இதனால் யானை படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அருண் விஜய் சினம், பார்டர் என இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அருண் விஜய் யானை படத்தை மலைபோல் நம்பி இருந்ததால் இப்படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தான் மற்ற படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என திட்டம் போட்டிருந்தார்.

ஆனால் யானை படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் அருண் விஜய் நடித்துள்ள மற்ற படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். ஏனென்றால் ஓடிடியில் வெளியிட்டால் எப்படியும் கல்லா கட்டிவிடலாம்.

அதுவே தியேட்டர் ரிலீசுக்கு போனால் போட்ட பணத்தை எடுப்பது கஷ்டம் என தயாரிப்பாளர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அருண் விஜய் இந்தப் படங்களை நம்பி தியேட்டரில் ரிலீஸ் செய்யுங்கள் நிச்சயம் வெற்றியடையும் என்று அனைவரிடமும் கூறிவருகிறாராம்.

இதனால் யானை படத்தை போல் அடுத்த படங்களை நம்பியிருந்த அருண் விஜயின் தலையில் இடியை இறக்கி உள்ளார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தற்போதே அருண் விஜய்யின் பட தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களை நாடி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Trending News