வேற வழியே இல்லாமல் சீரியலுக்கு வந்த பிக்பாஸ் நடிகை.. இப்பயாவது விடிவு காலம் பொறந்துச்சே

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சிலர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளனர். அவ்வாறு பட்டி தொட்டியில் உள்ளவர்களையும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனாலும் சில வருடங்கள் மட்டுமே பலராலும் பாராட்டப் படுகின்றார்கள்.

ஆனால் அதன் பின்பு இருக்கின்ற இடம் கூட தெரிவதில்லை. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். ஆனால் இவருக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் வரத்தொடங்கியது.

ஆனால் அதை எப்படியாவது போக்க வேண்டும் என்பதற்காக கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பங்கு பெற்றார். எப்படித் தன் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போனதோ அதிலிருந்தே மீண்டும் ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றார். அதன்பின்பு ஜூலி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதனால் இவருக்கு தற்போது சின்னத்திரை வாய்ப்புகள் வந்துள்ளது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தவமாய் தவமிருந்து என்ற தொடரில் ஜூலி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் மூலம் பிரபலமான இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஜூலியின் ரசிகர்கள் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடரில் நடித்து வர வேண்டும் என விரும்புகிறார்கள். இதனால் ஜூலி தொடர்ந்து தவமாய் தவமிருந்து சீரியலில் வரப் போகிறாரா அல்லது சில எபிசோடுகள் மட்டுமே வருகிறார் என்பது போகப்போகத் தெரியும்.

ஆனால் ஜூலி வெள்ளித்திரையில் ஒரு நடிகையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் தற்போதும் பலவிதமான போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்து எந்த இயக்குனர்கள் ஆவது வாய்ப்பு கொடுப்பார்கள் என்று இவ்வாறு செய்து வருகிறார்.