உண்மையா பாவம்யா அவரு.. சேதுபதி மீது கோவப்பட்டு பிக்பாஸ் அர்ச்சனா போட்ட போஸ்ட்

Archana
Archana

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளோடு இருந்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது, பலருக்கு பிடித்திருக்கிறது. ஆனால் கடந்த வாரம், மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து கொஞ்சம் தலைக்கனம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. போட்டியாளர்களை roast பண்ணுகிறேன் என்ற பெயரில், சில நேரம் அவமான படுத்துகிறார். அதுவும் அருண் உண்மையிலேயே அப்பாவியான ஒருவர்.

அவரை நிறைய பேர் கலாய்த்தாலும், ஒரு கட்டத்தில், அவருடைய நேச்சரே இது தான் போல என்று பார்ப்பவர்களே அமைதியாகிவிட்டனர். இப்படி இருக்க கடந்த வாரம், அருணிடம் விஜய் சேதுபதி நடந்துகொண்ட விதம், யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. சோம்பு தூக்கி என்று யாருக்கும் தான் அவார்ட் கொடுக்க விரும்பவில்லை என்று கூறியபோது, ‘அப்போ நீங்களே வச்சுக்கோங்க ‘ என்று சொன்னார்.

பாவம் அருண் முகமே மாறிவிட்டது. இந்த நிலையில் மக்கள் இந்த கிளிப்பை சமூகவலைத்தளங்களில் போட்டு வைரல் பண்ணிக்கொண்டிருக்க, நிறைய பேர் விஜய் சேதுபதி-க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடுப்பான பிக் பாஸ் அர்ச்சனா

அருண் பிரசாத் உடன் நெருக்கமாக இருக்கும் பிக் பாஸ் அர்ச்சனா தற்போது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்ற பேச்சும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. ஆனால் இதுவரை அவர்கள் வெளிப்படையாக அதை தெரிவித்தது இல்லை.

இப்படி இருக்க, விஜய் சேதுபதி அருணை அசிங்கப்படுத்தும் வீடியோவை பதிவிட்டு ‘Stand by Arun Prasath’ என அவர் பதிவிட்டு இருக்கிறார். முந்தைய பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா தற்போது போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner