புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆண் நண்பருடன், புது வீட்டில் நெருக்கமாக போஸ் கொடுத்த பாவனி.. பிக்பாஸில் சொன்னதெல்லாம் பொய்யா?

விஜய் டிவியின் சின்னத்தம்பி  சீரியலின் மூலம் பிரபலமான பாவனி அதன்பிறகு, பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5ல் டாப் மூன்றாவது இடத்தை பிடித்த பாவனி ரெட்டிக்கு சோஷியல் மீடியாவில் தனி ஆர்மியே உருவானது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் பாவனி தன்னுடைய இறந்து போன கணவரை குறித்து பேசி ரசிகர்களை சென்டிமென்டாக லாக் செய்து விட்டார்.

அத்துடன் ப்ளீஸ் டாஸ்கின் போது ராஜு அவருடைய மனைவி உடன் பாசத்துடன் பேசி பழகியபோது, பாவனி பிரியங்காவிடம் தன்னுடைய கணவனை குறித்து கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்திருந்தால் பிக்பாஸ் தங்கள் இருவரையும் கோபமாக இருந்தாலும் சேர்த்து வைத்திருப்பார்.

மேலும் தன்னை பாதி யில் இப்படி தவிக்க விட்டு சென்று விட்டார் என்று பாவனி தன்னுடைய கணவரை குறித்து பிக்பாஸ் வீட்டில் பொய்யாக நடிக்கிறார் என்று சின்னத்திரையில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏனென்றால் பாவனியின் கணவர் இறந்த பிறகு தொழிலதிபர் அனந்த ஜாய் உடன் டேட்டிங் செய்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு தாய்லாந்து சென்று அனந்த ஜாய் உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாவனி அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

bhavani-bb5-cinemaprttai
bhavani-bb5-cinemaprttai

பின்பு கணவன் இறந்த இரண்டே வருடத்தில் புதிதாக பங்களா ஒன்றை கட்டி, கணவன் ஸ்தானத்தில் அனந்த ஜாயை அமரவைத்து பூஜைகளை செய்து அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இவ்வாறு பிக்பாஸ் வீட்டில் கணவனை இழந்த மனைவியாக சிம்பதி கிரியேட் செய்த பாவனி, பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸில் ஓரளவு நேர்மையுடன் நடந்து இருக்க வேண்டும். கணவனை குறித்து வருத்தத்துடன் பதிவிடும் நேரத்தில் இரண்டாவது காதலனை குறித்தும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்பது தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் பாவனி பிக்பாஸ் வீட்டில் பாவமாக காட்சியளித்தது எல்லாம் நடிப்பேன் என்றும் காட்டமாக விமர்சிக்கின்றனர்.

Trending News