வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலின் 2ம் பாகம்.. கதாநாயகியாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்!

சின்னத்திரை ரசிகர்களுக்கு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் விஜய் டிவி முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி மவுசு. அந்த வகையில் மதிய நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஈரமான ரோஜாவே என்ற சீரியல் சமீபத்தில் நிறைவடைந்து ரசிகர்களை ஏங்க விட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கதாநாயகனாக திரவியமும், கதாநாயகியாக பவித்ராவும் நடித்திருந்தனர். தற்போது பவித்ரா விஜய் டிவியில் மீண்டும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாவது பாகம் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லா நடிக்க உள்ளார். கேப்ரில்லா ஏற்கனவே வெள்ளித்திரையில் சென்னையில் ஒரு நாள், 3 போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அத்துடன் விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் கேப்ரில்லா டைட்டில் வின்னரானார். மேலும் தன்னுடைய திறமையான நடனத்தினால் பிக்பாஸில் கலந்து கொண்டு 5 லட்சத்துடன் வீடு திரும்பினார்.

அதன்பிறகு சோஷியல் மீடியாவில் விதவிதமான போட்டோக்களை நடத்தி இளம் நடிகையாக மாறுவதற்கு தேவையான அத்தனை முயற்சியையும் மேற்கொண்டார். அதற்கு பலனாக தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே2 சீரியலில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றுள்ளார்.

எனவே கேப்ரில்லாவை சீரியலில் காண்பதற்கு சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக திரவியம் நடிப்பாரா அல்லது புது கதாநாயகன் நடிக்க உள்ளாரா என்பது போன்ற முழு விபரமும் கூடிய விரைவில் வெளியாகும்.

Trending News