வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஜாடிக்கு கேத்த மூடியாக எஸ்ஜே சூர்யாவிடம் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. அதிரடியாக தொடங்கிய படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது எஸ்ஜே சூர்யா மாநாடு, உயர்ந்த மனிதன், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா, புதிதாக நடிக்க உள்ள படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் யாஷிகா.

என்னதான் யாஷிகா ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் தான் யாஷிகாவிற்கு பெரும் புகழைத் தந்தது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு யாஷிகா சில படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்க யாஷிகா தற்போது எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து முத்தின கத்திரிக்கா திரைப்படத்தின் இயக்குனரான வெங்கட் ராகவனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் ‘கடமையை செய்’ என்ற டைட்டிலுடன் இந்தப் படத்தை கணேஷ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரமேஷ் தயாரிக்க உள்ளாராம்.

sj-suriya-cinemapettai

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தப்படம் முத்தின கத்திரிக்கா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

எனவே யாஷிகா ஆனந்த் எஸ்ஜே சூர்யா இணைந்து பணியாற்றும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

Trending News