வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தொடர்ந்து கமலிடம் எழும் கேள்விகள்.. விளக்கத்தைப் பெற துடிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதி நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வரும்.

அந்த வகையில் இந்த வாரத்தில் நடந்த பல்வேறு சண்டை சச்சரவுகளை கமல் நேற்றைய நிகழ்ச்சியில் தட்டிக் கேட்டார். இருப்பினும் பிக்பாஸ் ரசிகர்கள் பாவனி மற்றும் அபினை இடையே இருப்பது காதலா? நட்பா? என்ற விவாதத்தில் பல்வேறு சர்ச்சையை கிளப்பும் பிக் பாஸ் போட்டியாளர்களை தட்டிக்கேட்க வேண்டும் என்று இணையத்தின் வாயிலாக கேள்வி எழுப்புகின்றன.

குறிப்பாக திருமணமான அபினைக்கு, மனைவி குழந்தை இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அத்துடன் கணவனை இழந்த பாவனிக்கும் இதுபோன்ற சம்பவம் மன அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே ஒரு ஆண் மற்றும் பெண் தனியாக சேர்ந்து அமர்ந்து பேசினால் அது நட்பாக இருக்கக் கூடாதா என்றும் பலர் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களை செம்ம ரைடு விட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மேலும் பிரியங்கா தான் இதுகுறித்து முதன்முதலாக நிரூப்புடன் கிசுகிசுத்து பிக்பாஸ் வீட்டில் சர்ச்சையை கிளப்பிய முதல் நப.ர்

எனவே அவருக்கு குறும் படம் போட வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அத்துடன் இன்று எலிமினேஷன் உடன் பாவனி மற்றும் அபினை இருவருக்கும் இடையே இருக்கும் சர்ச்வசைகளையும் கமல் தீர்த்து வைக்க வேண்டும் என்று கமலுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Trending News