வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக்பாஸ் மூலம் கோடீஸ்வரராக மாறிய ஆரி.. 105 நாளில் அவருடைய மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நான்காவது சீசனில் நடிகர் ஆரி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பிக்பாஸ் மூலம் அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ஆரிக்கு திரைப்படங்கள் மூலம் கிடைக்காத வரவேற்பு பிக்பாஸ் மூலம் கிடைத்துள்ளது. 16 கோடி ஓட்டு பெற்று பிக்பாஸ் நான்காவது சீசனில் வெற்றியாளர் ஆனார். இதனால் ஆரிக்கு தற்போது பாராட்டுகளும், வரவேற்புகளும் குவிந்து வருகின்றன.

பிக்பாஸ் மூலம் ஆரிக்கு மொத்தமாக எவ்வளவு வருமானம் என்பதை பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. பிக்பாஸில் நாளொன்றுக்கு ஆரிக்கு 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆரி 105 நாட்கள் வெற்றிகரமாக பிக்பாஸில் இருந்ததால் மொத்தம் 89 லட்சத்து 25 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகைக்கு வரி பிடித்தம் போக 62, 42, 500L அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு 50 லட்சம் பரிசுத்தொகை. இந்த தொகைக்கு வரி போக 30 லட்சம் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் மூலம் மொத்தமாக ஆரிக்கு 97, 47, 500 ரூபாய் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

aari-biggboss-cinemapettai
aari-biggboss-cinemapettai

கடந்த சில தினங்களாகவே ஆரி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமே ஆரி வெற்றி பெற்றதில் மிகுந்த சந்தோஷம். ஆனால் உடன் இருந்த போட்டியாளர்களில் சனம் மற்றும் அனிதா ஆகிய இருவரை தவிர மற்ற யாருக்குமே சந்தோசம் இல்லை என்பது பிக்பாஸ் மேடையிலேயே தெரியவந்தது.

Trending News