செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது.. பிக் பாஸில் சிவின் வெளியேறியதற்கு கமல் கூறிய காரணம்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக சிவின், விக்ரமன், அசீன் மூவரும் கிராண்ட் பினாலே மேடையில் நின்றனர். இதில் சிவின் ஜெயிப்பார் என ரசிகர்கள் பலரும் நினைத்தனர். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் ஜெயிப்பார் என தனியார் சேனல் உள்ளிட்ட சில ஊடகங்கள் எடுத்த கருத்துக்கணிப்பிலும் சிவினுக்கு தான் நல்ல சப்போர்ட் கிடைத்தது.

மேலும் சோசியல் மீடியாவிலும் சிங்கப்பெண் சிவினுக்கு என்றே தனி ஆர்மி கூட்டமும் இருந்தது. ஆகையால் அவருக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்த டைட்டில் வின்னர் ஆகுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால் பொதுமக்கள் பலரும் சிவினை தங்கள் வீட்டு பெண்ணாகவே நினைத்து பாசம் காட்டினார்கள்.

Also Read: அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

இதுமட்டுமின்றி பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடையில் கூட கமலஹாசன் மூவரில் யாருக்கு ஆதரவு என்று தனித்தனியாக கேட்டபோது சிவின்தான் பலருடைய தேர்வாக இருந்தால், மக்கள் சாம்பியனாக பார்க்கப்பட்ட சிவில் இறுதிக்கட்டத்தில் எலிமினேட் செய்யப்பட்டது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சிவின் ஜெயிக்கணும் என்று நினைத்தால் மட்டும் பத்தாது. அவருக்கு வாக்குகளையும் அளிக்க வேண்டும். அதை மக்கள் செய்ய தவறி விட்டனர். அதனால்தான் சிவின் வெளியேற்றப்பட்டார் என்று உலக நாயகன் கமலஹாசன் சிவின் எலிமினேட் ஆனதற்கு காரணம் சொன்னார்.

Also Read: அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

இருப்பினும் இவருடைய காரணத்தை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சிவின் ‘பீப்பிள்ஸ் சாம்பியன்’ என்றும் சோசியல் மீடியாவில் கொண்டாடுகின்றனர்.

மேலும் தவறான தீர்ப்பளித்த பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமலஹாசனை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டு கிழித்து தொங்க விடுகின்றனர். சிவின் டைட்டில் வின்னராகாவிட்டாலும் அவருக்கு நிச்சயம் பிக் பாஸுக்கு பிறகு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மேலும் 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்த சிவில் மொத்தமாக 21 லட்சத்தை சம்பளமாக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

Trending News