வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் ஓடிடி-யில் களமிறங்கும் சர்ச்சையான 12 போட்டியாளர்கள்.. சம்பவம் நிறைய இருக்கும் போலயே

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்5 இன்னும் ஒரே வாரத்தில் நிறைய உள்ளதால், அடுத்த சீசனை குறித்து அப்டேட் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. எனவே இந்த சீசனில் தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாமல் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ஆகையால் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் புதிய நபராக இல்லாமல் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் யார் ரசிகர்களுக்கு பிடித்தமான சுவாரசியமான போட்டியாளர்களாக இருந்தார்களோ, அவர்களைத் தேர்வு செய்து கலந்து கொள்ள வைக்க உள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த மற்ற சீசன்களில் வெற்றியாளர்களை பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ளமாட்டார்கள்.

ஆகையால் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் சீசனில் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, கவின், ஷெரின், ஜனனி ஐயர், தர்ஷன், அனிதா, வனிதா, லாஸ்லியா, ஹரிஷ் கல்யாண், ஓவியா, ஜூலி ஆகிய 12 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து விடைபெற்ற ஓவியா, மீண்டும் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ள உள்ளது ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

எனவே 70 நாட்கள் நடைபெறவுள்ள பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி சுவாரசியம் குறையாமல் செய்வதற்கென்றே சர்ச்சைக்குரிய போட்டியாளர்களை தேர்வு செய்ய பிக்பாஸ் குழுவினர் முனைப்புடன் செயல்படுகின்றனர். அதற்காக அவர்கள் தேர்வு செய்த போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் சீசனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். எனவே இந்த நிகழ்ச்சி சண்டை சச்சரவுக்கு பஞ்சம் இருக்காமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

எனவே குறித்த பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் முதல் சீசன் ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஜனவரி மாதம் இறுதியில் துவங்க உள்ளது. அதை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Trending News