புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

91 நாட்கள் பெஸ்ட் ஹாலிடேக்கு வந்த ரட்சிதாவின் மொத்த சம்பளம்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டம போச்சே

விஜய் டிவியின் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஷோவாக ரசிகர்களால் பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு தற்போது எட்டு போட்டியாளர்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதனால் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் பரபரப்பாக நடத்தப்பட்டது. அதில் அமுதவாணன் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இந்நிலையில் இவ்வளவு நாள் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனது நிஜ ரூபத்தை மறைத்து சுற்றித்திரிந்த சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி கடந்த வாரம் தான் சுறுசுறுப்பாக விளையாடி போட்டியாளர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

Also Read: 87 நாட்கள் பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா.? பிக் பாஸ் ரசிகையின் கேள்வியை வைத்து அசிங்கப்படுத்திய அசீம்

மேலும் ரட்சிதாவும் டிக்கெட் டு பின்னாலே டாஸ்க் ஒரு சில போட்டிகளில் முதலிடத்தை பிடித்தும் தற்போது எலிமினேட் ஆகியிருப்பது கைக்கெட்டியது வாய்க்கெட்டம போச்சே. இதனால் அவர் டாப் 5 இடத்திற்கு செல்வார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ரட்சிதாதான் இந்த வாரம் எலிமினேட் ஆக போகிறார்.

ரட்சிதா மொத்தம் 13 வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் ஒரு வாரத்திற்கு ரூபாய் 28,000 சம்பளம் கொடுப்பதாக விஜய் டிவியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் ரட்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்த பெஸ்ட் ஹாலிடேவிற்காக மொத்த சம்பளமாக 3 லட்சத்து 64 ஆயிரம் பெற்றுள்ளார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி

இவருடைய சம்பளத்தை கேட்ட பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போய் உள்ளனர். ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் ரட்சிதா கவர்ச்சியை மட்டும் காட்டியது மட்டுமின்றி சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ராபர்ட் மாஸ்டருடனும் கிசு கிசுக்கப்பட்டார்.

இதைத்தவிர பிக் பாஸ் வீட்டில் எதுவும் செய்யாத ரட்சிதாவிற்கு இத்தனை லட்சத்தை விஜய் டிவி வாரி கொடுத்து இருக்கிறதா! என்றும் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ரட்சிதா மகாலட்சுமி-க்கு மீம்ஸ் போட்டு தெறிக்க விடுகின்றனர். மேலும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் விக்ரமன் என்றும் பலரும் யோகித்திருக்கின்றனர்.

Also Read: கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

Trending News