புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக்பாஸ் சீசன்5 டைட்டில் வின்னர் இவர்தான்.. அடித்துக் கூறிய நமீதா மாரிமுத்து!

விஜய் டிவியின் டாப் லிஸ்டில் இருக்கும் பிரபல நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன்5. இதில் வந்த முதல் வாரத்திலேயே நாமினேஷன் செய்யப்படாமலேயே சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை நமீதா மாரிமுத்து போட்டியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மலேசியா மாடல் நாடியா சாங், பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, மற்றும் மாடல் சுருதி ஆகியோர் இதுவரை போட்டியிலிருந்து மக்களின் தீர்ப்பால் வெளியேற்றப்பட்டனர்.

முதல்நபராக வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து ரசிகர்களின் பல கேள்விக்கு ஆளானார். எனவே அவர் சாமர்த்தியமாக ஒரு முடிவு செய்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் என்னும் பகுதியினை தொடங்கினார். அதில் ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டு அவரை ஒரு வழி ஆக்கி விட்டனர். ஆனால் எதற்கும் அசராமல் அவர் ரசிகர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் நிதானமாகவும், சாதுர்யமாகவும் பதில் அளித்துள்ளார்.

அந்தக் கேள்விகள் பலவும் தாமரை மற்றும் இவரை குறித்தே இருந்தன. அதில் ரசிகர் ஒருவர், தாமரை ஒரு அப்பாவியா? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டு கேள்வி வலையில் அவரை சிக்கவைக்க, நமீதா நேக்காக அவர் அப்பாவியா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த போட்டியை திறமையுடன் விளையாடும் அளவிற்கு சாமர்த்தியசாலி ஆக அவர் இல்லை என்று தன்னுடைய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ரசிகர் தாமரைக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்சனை என்று கேட்க, நமீதா எந்த பிரச்சினையும் இல்லை. அவர் வெளியே வந்ததும் கண்டிப்பாக எங்க குடும்ப விழாவில் ஏதேனும் ஒன்றில் அவரை பர்பாம் பண்ண சொல்லுவேன் என்று அசால்டாக பதில் சொன்னார்.

மேலும் இன்னொரு ரசிகர் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஆணித்தனமாக சிபி சந்திரன் அல்லது இசைவாணி எனத் தனது கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளார் நமீதா மாரிமுத்து.

அதே வேளையில் மீண்டும் போட்டியில் கலந்து கொள்வீர்களா என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, நமீதா கலந்து கொள்ளலாம் அல்லது கலந்து கொள்ளாமலும் இருக்கலாம். பார்க்கலாம் என பொடி வைத்துப் பேசியுள்ளார். இவ்வாறு பிக்பாஸ் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் திருநங்கை நமீதா மாரிமுத்து.

Trending News