விக்ரம் முடித்த கையோடு துவங்கப்படும் பிக்பாஸ் சீசன் 6.. சம்பவத்திற்கு நாள் குறித்த விஜய் டிவி!

நான்கு வருடங்களுக்குப் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மீண்டும் திரையில் பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தை தாறுமாறாக வசூல் வேட்டையாட வைத்திருக்கின்றனர். இதுவரை கமல் நடித்த எந்த படத்திற்கும் இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் கமலஹாசன் தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் படக்குழுவுக்கு கார், பைக், ரோலக்ஸ் வாட்ச் என பரிசு பொருட்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் கமலஹாசன் தொகுத்து வழங்கியதுனாலேயே நல்ல வரவேற்பு கிடைத்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை ஐந்து சீசனை வெற்றிகரமாக முடித்து தற்போது 6-வது சீசன் துவங்க இருக்கிறது. அதற்கான அறிவிப்பு தேதியும் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஐந்து சீசனையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியதால், தற்போது அக்டோபர் 2-ம் தேதி துவங்கியிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கப் போகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களும் ஜூன் மாதம் துவங்கப்பட்ட நிலையில் கொரோனா தோற்று பாதிப்பின் காரணமாக கடைசி இரண்டு சீசன்களில் அக்டோபரில் துவங்கப்பட்டது .

அதனால் தற்போது துவங்கியிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் அக்டோபர் இரண்டாம் தேதி துவங்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டு துவங்க உள்ளனர். அத்துடன் பிக்பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகுவது மட்டுமல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது முயற்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1, சிம்பு தொகுத்து வழங்கி அண்மையில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் டைட்டில் வின்னர் ஆக பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பிறகு இனி வரும் நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும். அவர்களுள் ஒருவராக, சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்த இசையமைப்பாளர் ஒருவனின் முன்னாள் மனைவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.