சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சுருதியை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அடுத்த மாடல் அழகி.. கும்பிடு போட்டு வழியனுப்பிய ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ராஜு, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி ரெட்டி, அக்ஷரா, அபினை, மதுமிதா இவர்களுள் மக்கள் குறைந்த வாக்குகளை யாருக்கு அளிக்கிறார்களோ அவர்கள் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள்.

இதில் ராஜு ஏற்கனவே நேற்றைய நிகழ்ச்சியில் காப்பாற்றப்பட்டு விட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய கருத்துக்களை பேசமுடியாமல் மொழிப் பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மதுமிதா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

இவர் ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி, இருப்பினும் தமிழின் ஏற்பட்ட ஆர்வத்தினால் தன்னுடைய கொஞ்சும் தமிழால் பிக்பாஸ் ரசிகர்களை கொள்ளை அடித்தார். இருப்பினும் அவரால் தொடர்ந்து தமிழில் பேச முடியவில்லை ஆங்கிலம் கலந்த தமிழ் இவ்வளவு நாள் பிக் பாஸ் வீட்டில் பேசி ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் வரும் நாட்களில் போட்டி கடுமையாக இருப்பதால், பிக்பாஸ் விதிமுறைகளில் ஒன்றாக ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதால் அவர் கடந்த சில நாட்களாகவே பேசவே மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் சின்னப்பொண்ணுவை தொடர்ந்து கண்டன்ட் கொடுக்காத கன்டஸ்டன்ட்ஸ் என்ற பெயரில் மதுமிதாவிற்கு ரசிகர்கள் ஓட்டுக்களை குறைவாகவே பதிவிட்டுள்ளனர்.

mathu-bb5-cinemapettai
mathu-bb5-cinemapettai

ஏற்கனவே கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி மதுமிதாவை பார்த்து, ‘உங்களுடைய குரலை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். ஆகையால் உங்களுடைய குரல் ஒலிக்கட்டும்’ என்று நிறைய முறை வார்னிங் கொடுத்திருந்தார்.

அப்படியும் மதுமிதாவால் சுவாரஸ்யம் நிறைந்த போட்டியாளராக மாற முடியவில்லை. இதன் காரணமாக இந்த வாரம் மதுமிதா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

Trending News