வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிக் பாஸ் சீசன்5 டைட்டில் வின்னரில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்.. யாரும் எதிர்பாராத திருப்பம்!

100 நாட்களை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசனில் இறுதிச்சுற்றுக்கு நிரூப், ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர் ஆகிய ஐந்து பேர் தேர்வாகியுள்ளனர்.

அத்துடன் கமலஹாசன் அவர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பதால் அதற்கேற்றார்போல் இதுவரை இந்த சீசனில் வெற்றியாளராக ராஜு அல்லது பிரியங்கா இருவரில் ஒருவர்தான் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் அரங்கேற உள்ளது.

ஏனென்றால் ராஜு, பிரியங்கா பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக போவதில்லை என்றும் முதல் மற்றும் இரண்டாம் இடம் இவர்களுக்கு தான் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இரண்டாவது இடத்தில் இருப்பவர் மூன்றாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.

அதேபோல் முதல் இடத்திலும் மாறுதல் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று இணையத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல் கசிந்துள்ளது. ஆகையால் பாவனி மற்றும் நிரூப் இவர்களில் ஒருவர்தான் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றனர் என்ற தகவல் தற்போது பிக்பாஸ் ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

ஏனென்றால் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களை சிரிக்க சிரிக்க வைத்தும், இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக மாற்றிய ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த முடிவில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருப்பினும் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படும் என்பதால் இந்த வாரம் முழுவதும் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும். ஆகவே இன்னும் ஒரு சில தினத்தில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது உறுதியாகும். எனவே அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News