வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த வாரம் பிக் பாஸில் வெளியேறும் நபர்.. இணையத்தில் லீக்கான ஓட்டிங் லிஸ்ட்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆகையால் இன்னும் 2 வாரத்தில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னிலையில் ராஜு, நிரூப், பிரியங்கா, சஞ்சீவ், அமீர், தாமரை, பாவனி, சிபி ஆகிய 8 பேரும் இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர்.

எனவே கடந்த வாரம் வருண், அக்ஷரா இருவரும் திடீரென்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழத் தொடங்கியுள்ளது.

இன்னிலையில் தற்போது இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆனா சஞ்சீவ் மக்களிடம் குறைவான ஓட்டுக்களைப் பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளார். எனவே அவரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

bb5-voting-cinemapettai89
bb5-voting-cinemapettai

நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சிபி மற்றும் அமீருடன் போட்டி போட்ட சஞ்சீவ் நூலிழையில் தோற்றுவிட்டார். ஒருவேளை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் முன்னேறி சென்றிருந்தால் எலிமினேஷனிலிருந்து தப்பித்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு நடக்காததால் ஓட்டிங் லிஸ்டில் கடைசி இடத்தை பிடித்த சஞ்சீவ் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் வரும் ஞாயிற்றுக்கிழமை யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News