வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸில் பிரபலமடைந்த டாப் 5 போட்டியாளர்.. இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவரே?

பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் சுவாரசியமாக மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். தற்பொழுது பிக் பாஸ் சீசன்5 தொடங்கி நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாமல் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில், இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு கொண்டிருக்கின்றன.

தற்பொழுது மக்களிடம் பிரபலமாகவும் அதிக ஆதரவையும் பெற்று டைட்டில் வின்னர் ஆகுவதற்கு அதிக வாய்ப்புள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் பட்டியலில் உள்ள போட்டியாளர்கள் பிரியங்கா தேஷ்பாண்டே, ராஜு ஜெயமோகன், பாவனி ரெட்டி, இமான் அண்ணாச்சி மற்றும் இசைவாணி ஆவார்கள். தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்கா மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்று டைட்டில் வின் பண்ணும் போட்டியாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ராஜூ ஜெயமோகன் ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படத்திலும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன்2 என்னும் சீரியலிலும் நடித்து பட்டையை கிளப்பி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர். மேலும் ராஜு போட்டியில் நேர்மையாகவும், கலகலப்பாகவும் விளையாடி மக்களை ஈர்த்து வருகிறார். மக்களிடையே பிரியங்காவுக்கு அதிக செல்வாக்கு இருந்தாலும் உண்மையான கேரக்டரை பிரதிபலிக்கும் பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவை தூக்கி சாப்பிட்டு விட்டார் ராஜு பாய். இவர் தான் முதல் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளதாக இணையதள வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இதேப்போல் கானா மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் பாடகி இசைவாணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் இமான் அண்ணாச்சி அவர்கள் ஒரு தொகுப்பாளர் நடிகர் மற்றும் காமடியன். இவரும் தனது கலகலப்பான பேச்சால் மக்களை தன்பால் ஈர்த்தவர். எனவே இவரும் மக்களின் ஆதரவால் போட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

raju-bigg-boss

அதைத்தொடர்ந்து சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கலக்கிய நடிகை பாவனி ரெட்டி. இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. எனவே இவரும் வெற்றி பெற மிக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இவ்வாறு இந்த ஐந்து போட்டியாளர்களும் டைட்டில் வின் பண்ணும் லிஸ்டில் இருந்து யார் வெற்றிபெற போவார் என மக்களின் எதிர்பார்ப்பை அதிகம் தூண்டுகின்றனர்.

Trending News