வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பிக்பாஸ் துரத்திவிட போகும் 2வது நபர்.. இங்க இருக்கறத விட பருத்தி மூட்ட வெளியிலேயே போயிடலாம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு இரண்டு வாரத்தை நிறைவு செய்ய உள்ளது. ஹாட்ஸ்டாரில் ஒரு வாரம் முழுவதும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் மிகுந்த சம்பவங்களை விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு 3 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே கடந்த வாரம் இறுதியில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வார இறுதி நாளிலும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 13 நபர் ஒருவர் வெளியிடப் போகிறார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அபினை, தாடி பாலாஜி, ஜூலி, தாமரைச்செல்வி, சுஜா, பாலாஜி முருகதாஸ் ஆகியோருக்கு ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் தங்கள் ஓட்டுகளை அளித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் ஓட்டிங் லிஸ்டில் மக்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று பாலாஜி முருகதாஸ் முதலிடத்தில் இருக்கிறார். இவரைத் தொடர்ந்து தாமரைச்செல்வி இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.

ஜூலி மூன்றாவது இடமும், தாடி பாலாஜி ஆகியோர் அடுத்தடுத்து இடத்தைப் பெற்றிருக்கின்றனர். சுஜா குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். எனவே கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் அபினை, சுஜா இருவருள் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது.

அதிலும் குறிப்பாக சுஜா அடுத்த எலிமினேஷன் ஆகும் நபர் என்று சோசியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனென்றால் சுஜா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் எரிச்சலூட்டும் போட்டியாளராக இருக்கிறார் என்று ரசிகர்கள் சிலர் எண்ணுகின்றனர்.

மேலும் சென்ற வாரம் அபினை வெளியேறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென்று யாரும் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கமல் அடிக்கடி சொல்லும் டயலாக்-க்கு ஏற்ப சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வியப்பை அளித்தது. அதேபோல் இந்த வாரமும் யார் வெளியேற போகிறார் என்று கடைசி நிமிஷம் தான் தெரியவரும் என்று ஒரு சிலர் யூகிக்கின்றனர்.

Trending News