வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.. இணையத்தில் லீக் ஆன லிஸ்ட்!

விஜய் டிவி கடந்த ஐந்து சீசன் களாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது புது முயற்சியாக OTT-யில் நேரடியாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும்.

அத்துடன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் லோகோ நேற்று நடைபெற்ற பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலேவில் நடிகர் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்தார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவதாகவும் அவரே அந்த மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நிறைவடைந்து அடுத்து துவங்கவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உறுதியான போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் வனிதா, அனிதா, ஓவியா, ஜூலி, சுஜா, ஐஸ்வர்யா, ஷெரின், ஆர்த்தி, ஷாரிக் ஆகிய பத்து பேர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் வனிதா, சவுண்ட் பார்ட்டி என்பதால் நிச்சயம் பிக்பாஸ் அல்டிமேட் தாறுமாறாக பட்டைய கிளப்பு கூடிய காரசாரமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சி 75 நாட்கள் நடைபெற உள்ளது.

இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்களை களம் இறக்காமல், ஏற்கனவே நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களையும், ரசிகர்களுக்குப் பிடித்த போட்டியாளர்களும் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள வைப்பது இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த சீசனில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவே இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி OTT-யில் துவங்க உள்ளதால் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடங்கிய ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News