வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Wild Card Contestants ஒரு நாள் சம்பளம் தெரியுமா? வயித்தெரிச்சலில் இருக்கும் சீனியர் contestants

பிக் பாஸ் சீசன் 8, தான் இருப்பதிலேயே காட்டு மொக்கை சீசன் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆள் தேர்வு சரி இல்லை. டாஸ்க் சரி இல்லை. கன்டென்ட் சரி இல்ல..இப்படி இருக்கும் சூழ்நிலையில், இந்த வைல்ட் கார்டு contestants வந்த பிறகாவது சுவாரசியம் வரும் என்று பார்த்தால், அவர்கள் வராமலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த வைல்ட் கார்டு contestants -ன் சம்பள விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கூத்து என்னவென்றால், நன்கு விளையாடும் ஒரு சில சீனியர் கொண்டெஸ்டண்ட்ஸை விட இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றும் செய்வதில்லை. அப்போ வயித்தெரிச்சல் வருவது இயல்பு தானே.

Wild Card Contestants ஒரு நாள் சம்பளம்

Wild Card Contestants ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த முறை பிக் பாஸ்-க்கு வந்த போட்டியாளர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர செயலில் ஒன்றும் இல்லை. அதுவும், சத்யா அன்ஷிதா போன்றவர்கள் கொஞ்சம் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அருண் தன் சுயரூபத்தை காட்டும் நிலையில், ஆர்.ஜே ஆனந்தி ஆரம்பத்தில் இருந்து இப்போ வரைக்கும் நரி வேலை மட்டும் தான் பார்த்து வருகிறார்.

மேலும் பவித்ரா தர்ஷிகா போன்றவர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பிக் பாஸ் அவர்களுக்கு பெரிதாக focus வைப்பது இல்லை. தீபக், முத்துக்குமரன் மட்டும் தான், தொடர்ந்து வெற்றிகரமாக கன்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு நடிகர் ராயன்-க்கு ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படுகிறது. சிவகுமார், ரானவ், வர்ஷினிக்கு ஒருநாள் சம்பளமாக ரூ. 12,000 வழங்கப்படுகிறது. மேலும் ரியா மற்றும் மஞ்சரி-க்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. ராயன், சிவகுமார், வர்ஷினி, ரானவ் வாங்கும் சம்பளம் அங்கு உள்ள ஒரு சில சீனியர் contestants வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஆனால் அவர்கள் கொடுக்கும் ஸ்வாரஸ்யத்தில் பாதி கூட கொடுக்கவில்லை

Trending News