புதன்கிழமை, நவம்பர் 20, 2024

விரைவில் தியேட்டரை தெறிக்க விடபோகும் படங்கள்.. ரசிகர்களின் பசிக்கு சரியான தீனி

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் சினிமா துறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. பல கோடி செலவில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் தற்போது வெளியிட முடியாத நிலையில் தவித்து வருகிறது. இந்த கொரோனா தொற்றின் காரணமாக பல மாநிலங்களிலும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து பிரம்மாண்டமாக தயார் செய்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரபல நடிகர்களின் திரைப்படங்களும் அடங்கும்.

அந்த வகையில் ஆர்ஆர்ஆர், வலிமை போன்ற திரைப்படங்களின் வெளியீடு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த தொற்றால் சென்னை தான் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இருப்பினும் இந்த தொற்று பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் கட்டுக்குள் வர தேவையான அனைத்து முயற்சிகளும் தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களில் படங்கள் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் வரும் மார்ச் மாதத்தில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று சொல்ல படுகிறது. அதை தொடர்ந்து ஆர்ஆர்ஆர், கேஜிஎப், பீஸ்ட், விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன், ஜி வி பிரகாஷ் நடித்த ஐயங்கரன், விக்ரம் நடிப்பில் மகான் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளிவர இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News