தமிழ் சினிமாவில் ராஜா போலிருந்த பிரம்மாண்ட இயக்குனரை சமீபத்தில் அண்டை மாநில தயாரிப்பாளர் ஒருவர் படாதபாடு படுத்தி வரும் செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நம்ம ஊரு கெத்து கை தான் அதை இயக்குனர். பிரம்மாண்டமான படங்களை எடுப்பதில் இவரை அடித்துக் கொள்ள ஆளில்லை. ஆனால் அந்த பிரமாண்டமே அவருக்கு தற்போது நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி விட்டது.
சமீபகாலமாக நம்ம ஊரு தயாரிப்பாளர்கள் அந்த இயக்குனரை வைத்து படம் தயாரிக்க யோசித்து வருகின்றனர். அதற்கு காரணம் அந்த இயக்குநர் சொல்லும் பட்ஜெட்டைவிட பலகோடி அதிகமாக செலவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை நடுத்தெருவுக்கு இழுத்து விடுவார்.
சமீபத்தில் ஸ்டார் நடிகரை வைத்து பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவான படம் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் தடுமாறியது. அந்த நஷ்டத்தை சரிகட்ட தான் உலக நடிகருடன் அந்த இரண்டாம் பாகம் படத்தை எடுத்து வந்தாராம்.
அந்தப் படம் பாதியில் தவிக்கிறது. இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அண்டை மாநில முன்னணி நடிகருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அந்த பிரம்மாண்ட இயக்குனர். அந்த படத்தை தயாரிப்பவர் அக்கடதேச டான் என்கிறார்கள்.
படத்தில் அக்ரிமெண்ட் போடும்போதே பட்ஜெட்டுக்கு மீறி பத்து பைசா செலவு பண்ண மாட்டேன் என தெளிவாக கூறி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் உங்க ஊரு தயாரிப்பாளர் மாதிரி நாங்க ஒன்னும் ஏமாந்தவர்கள் கிடையாது எனவும், பிரமாண்டம் என்ற பெயரில் சுரண்டும் வேலை ஆகாது எனவும் முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.
அந்த இயக்குனரோ, எங்க ஊரில் நான் தான் ராஜா, ஆனால் என்னையே இந்த பாடு படுத்துகிறார்கள் என புலம்புகிறாராம். ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்டை தான் என்பது இந்த இயக்குனர் விவகாரத்தில் உறுதியாகி உள்ளது.