தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என தொடர்ந்து மூன்று, மூன்று படங்களா கொடுக்கும் அஜித், இந்த முறை ஹீரோயின் விஷயத்தில் அப்படி இறங்கிவிட்டார் போல். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தொடர்ந்து திரிஷாவை இரண்டு படங்களில் கமிட் செய்துள்ளனர்.
விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தில் கடும் பிசியாக வேலை பார்த்து வரும் லைக்காவிற்கு, அஜித் செய்த செயல் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 99 சதவீத வேலைகள் விடாமுயற்சி படத்தில் முடிந்துவிட்டது.
இப்பொழுது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இருவரும் இந்த படத்தை அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். தற்சமயம் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் குட் பேட் அக்லி. இந்த படம் ஸ்பெயின் நாட்டில் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
இக்கட்டான நேரத்தில் விழிப்பிதுங்க வைக்கும் ஏகே
குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் கேட்டுக்கொண்டதற்காக திடீரென ஷெட்யூல் பிரேக் விட்டு விட்டனர். இதனால் ஆர்டிஸ்ட்கள் அனைவரும் ஓய்வில் இருக்கின்றனர். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருந்து வந்த லைக்கா விடாமுயற்சி படத்திற்கு ஒரு பாடல் காட்சியை வேண்டாம் என்று ஒத்தி வைத்திருந்தது.
ஆனால் இப்பொழுது திரிஷா ஓய்வில் இருப்பதால் அவரை வைத்து அந்த பாடல் காட்சிகளை எடுத்து விடலாம் என விடாமுயற்சி டீம் விடாப்பிடியாய் நிற்கிறது. இதனால் லைக்கா கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மீண்டும் முருங்கமரம் வேதாளம் ஏறிவிட்டது.
- அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு கொட்டிய வியாபாரம்
- அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா
- உறுதியான குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி