மொத்த கோடம்பாக்கத்திலும் இப்பொழுது விஷாலின் உடல்நிலை தான் ஹாட் டாப்பிக். சமீபத்தில் விஷாலை மதகஜராஜா ப்ரோமோஷன் மேடையில் பார்த்த அனைவருக்கும் பயங்கர ஷாக். அவருக்கு மலேரியா ஜுரம் என நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் செய்தியை பரப்பினார்கள்.
உண்மையில் விஷாலுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட அறிகுறிகள் தெரிகிறது. மேடையில் பேசிய அவருக்கு கை, கால்கள் உதறிக் கொண்டே இருந்தது. வரும்பொழுது இரு இடங்களில் தள்ளாடி விழுந்துள்ளார். மருத்துவர்கள் இவருக்கு பெரிய பாதிப்பு இருக்கிறது என பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
படத்தில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் போது தலையில் அடிபட்டு இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது தவறான பழக்கவழக்கத்தில் கூட இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திருக்கும் என அவரை பார்த்த மருத்துவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே விஷால் நிம்மதியாக இருந்ததே கிடையாதாம். அவருக்கு போட் கிளப்பில் ஒரு வீடு இருக்கிறதாம். அங்கே சென்று வாட்ச்மேனை வெளியில் பூட்டு போட சொல்லிவிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தூங்குவாராம். இதிலிருந்து அவருக்கு உண்டான கஷ்டங்கள் தெளிவாக தெரிகிறது.
இப்பொழுது அவரது நெருங்கிய நண்பனான நடிகர் ஆர்யா இவர் நிலைமையை பார்த்துமும் மும்பையில் இருந்து சென்னை விரைந்துள்ளார். சாலை பார்க்க சென்ற அவர் வீட்டிலிருந்து அவரை வெளியே கொண்டு வந்துள்ளார். அவருடன் பழைய நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து விஷாலை பழைய நிலைமைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறார்கள். ஆர்யாவின் ஹோட்டலில் தான் எல்லோரும் நேற்று மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர்.