வீரதீர சூரன் படத்திற்கு போட்டியாக வரும் பார்ட் 2 படம்.. வசூலில் ஏற்பட்ட சிக்கல்

veera dheera sooran
veera dheera sooran

 Veeratheera sooran: அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வீரதீர சூரன் படம் உருவாகி இருக்கிறது. இதில் எஸ்ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. காரணம் இந்த படத்தை இயக்கும் அருண்குமார் முன்னதாக இயக்கிய சித்தா படம் தான். 

சித்தார்த் நடிப்பில் உருவான இந்த  படம் சைலன்டாக வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. சித்தா படத்தை பார்த்து விட்டு தான் விக்ரமே அருண்குமாரை தன் படத்தில் கமிட் செய்துள்ளார். 

வீரதீர சூரன் படத்திற்கு போட்டியாக வெளியாகும் எம்புரான் 

ஆனால் இப்போது வீரதீர சூரன் படத்திற்கு போட்டியாக மற்றொரு படம் வெளியாகிறது. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கிறது எம்புரான்.

லூசிஃபர் படத்தின் தொடர்ச்சி தான் எம்புரான். இந்த படம் பான் இந்தியா மொழி படமாக வெளியாகிறது. ஆகையால் தமிழிலும் கலைபுலி எஸ் தானு இந்த படத்தை வெளியிடுகிறார்.

எனவே இதன் காரணமாக வீரதீர சூரன் படத்தின் வசூல் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் மோகன்லாலுக்கு தமிழிலும் ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர்.

பெரிய நடிகர் படம் என்பதால் ஒரு மாஸ் ஓபனிங் இருக்கும். அதுவும் லூசிஃபர் முதல் பாகம் நல்லா வரவேற்பை பெற்ற வசூல் வேட்டையாடியது. அதே எதிர்பார்ப்பு எம்புரான் படத்திற்கும் இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner