ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்க உள்ளது.
இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் ஆடவில்லை.அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுகிறார். இதனால் அவர் எப்படி செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன.
தற்போது நடக்கும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் கேப்டன்கள் ஓபனிங் இறங்குவதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல், சஞ்சு சம்சன் போன்ற கேப்டன் பொறுப்பில் இருக்கும் வீரர்கள் இந்த தொடரில் ஓப்பனிங் இறங்க திட்டமிட்டுள்ளனர் .அவ்வாறும் செய்து வருகின்றனர்.
இதனால் இந்த முறை பந்த்தும் தன்னை புரோமோட் செய்து ஓப்பனிங் இறங்குவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. முதல் தர போட்டிகளில் பண்ட் ஓப்பனிங் இறங்கி இருக்கிறார். ஐபிஎல்லில் போட்டிகளில் பேட்டிங் பவர் பிளேவில் பந்த் மட்டும் ஓப்பனிங் இறங்கினால் அது டெல்லி அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுக்கும்.
டெல்லி அணியில் ஷிகர் தவான் தற்போது ஓப்பனிங் இறங்கி வருகிறார். அவருடன் இறங்கி வந்த ப்ரித்வி ஷா நல்ல பார்மில் இல்லை. இதனால் ஷாவிற்கு பதிலாக பந்த் இறங்கினால் அது டெல்லி அணிக்கு பெரிய பலமாக அமையும் ,மேலும் அவர் பவர் பிளே ஓவர்களில் அடித்து விளையாடக்கூடிய பிளேயர் ஆகையால்அது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாகும் அமையும். ஆகையால் இன்றைய போட்டியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.