சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

ராகுல் டிராவிட்டுக்கே செக்கா.. களை எடுக்க காத்திருக்கும் பிசிசிஐ

சமீப காலமாக இந்திய அணி அனைத்து தொடர்களிலும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடரில் தோற்றது, கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகியது, தென்னாப்பிரிக்காவில் மோசமான தோல்வி என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு சில கடினமான முடிவுகளை உடனே செயல்படுத்த வேண்டும். சீனியர் வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதிலும் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

இப்படியே சென்றால் இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அடுத்ததாக 20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நெருங்கி வருவதால் அதற்கான இந்திய அணியை இப்போதிலிருந்தே உருவாக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவுதான் முக்கியமானது. பார்மில் இல்லாத சீனியர் வீரர்களின் பிரச்சனையை சரிசெய்து அவர்கள் பார்மை மீட்டெடுக்க வேண்டும். இந்திய அணிக்கு அடுத்து வரும் காலகட்டங்கள் மிகவும் முக்கியமானதாகும். இந்த சமயத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வது மட்டுமன்றி அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு அவர்கள் இந்திய அணியின் தூணாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

Indian
Indian

இந்த விஷயத்தில் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இருவரும் கலந்து யோசித்து முடிவெடுத்தால் இந்திய அணிக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News