கபில்தேவிற்கு அப்புறம் இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் நீண்டகாலமாக ஒரு வெற்றிடம் காணப்பட்டது. அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு இந்திய அணி படாதபாடு பட்டது.
ராபின் சிங் சிறிது காலம் அதை பூர்த்தி செய்தாலும் அவருக்குப்பின், பல வீரர்கள் ஆல்ரவுண்டர் என இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாய் இருந்தனர். தற்போது ஹர்திக் பாண்டியா அந்த இடத்தை சிறிது காலம் தன்வசம் தக்க வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு பாண்டியாவிற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக இந்திய அணியில் இருந்து தன்னுடைய ஆல்ரவுண்டர் இடத்தை இழந்தார். அதன் பின் அணியில் இடம்பெற்றாலும் பந்து வீசுவது இல்லை. அதனால் இந்திய அணியிலிருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டு உள்ளார். இப்பொழுது இந்திய அணியில் பாண்டியாவின் இடத்தை பூர்த்தி செய்யும் விதமாக 3 ஆல்ரவுண்டர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
வெங்கடேஷ் ஐயர்: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். இவர் அதிரடி ஆட்டம் ஆட கூடிய ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். தற்போது இந்திய அணியில் விளையாடும் இவர் தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.
ஷர்துல் தாகூர்: பல போட்டிகளில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றியுள்ளார் தாகூர். டெஸ்ட் வீரர் என பெயர் எடுத்த இவர், இப்பொழுது ஒரு நாள் போட்டிகளிலும் தனது அபாரமான பேட்டிங் திறமையை நிரூபித்து வருகிறார்.
தீபக் சஹர்: 7வது ஆளாக களமிறங்கும் இவர் பேட்டிங்கில் பட்டைய கிளப்புகிறார். எந்த பவுலர் வந்தாலும் அசராமல் அடித்து ஆடும் இவர், இந்தியாவின் வருங்கால சிறந்த ஆல்-ரவுண்டராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.