ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

இந்தியன் 2க்கு பின் ஹலோ கூட சொல்லிக்காத 2 பெருந்தலைகள்.. தந்திரமா லைகா செய்த அட்டெம்ப்ட்

ஷங்கரின் சினிமா கேரியரிலே மோசமான பெயர் வாங்கிக் கொடுத்த படம் இந்தியன் 2 . பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா தயாரித்த இந்த படம் மோசமான பெயிலியர் ஆனது. இதனால் லைகா ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கும் பொழுதே மூன்றாம் பாகம் எடுப்பதற்கு திட்டம் போட்டுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் மூன்றாம் பாகத்துக்கும் சேர்த்து பல காட்சிகளை ஒரு சேர எடுத்துள்ளனர். இப்படி அடுத்த பாகத்திற்கும் கிட்டத்தட்ட 70% முடித்துள்ளனர்.

இந்த பாகங்களால் மொத்தமாய் ஒரு பெரிய தொகையை இழந்துள்ளது லைகா. இப்பொழுது கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. மேற்கொண்டு மூன்றாம் பாகம் முழுவதுமாக முடித்து தருவதற்கு சங்கர் 80 கோடிகள் பணம் கேட்டு வருகிறார். அதில் 30 கோடிகள் அவர் சம்பளமும் அடங்கும்.

இந்தியன் 2 ஓடாததால் கமல் மற்றும் லைகா இருவருக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. இதுவரை ஒரு ஹலோ கூட இருவரும் சொல்லிக்கவில்லையாம். இதற்கிடையில் இந்தியன் மூன்றாம் பாகத்தை நேரடியாக OTTயில் வெளியிடலாம் அதன் மூலம் லாபமடைந்து விடலாம் என லைகா அட்டெம்ப்ட் செய்துள்ளது.

லைகாவின் இந்த யோசனைக்கு கமல் மற்றும் சங்கர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது OTT காண படம் இல்லை என சங்கர் தரப்பும், அப்படி ரிலீஸ் செய்ய திட்டமிட்டால் டப்பிங் பேச மாட்டேன் என கமலும் சண்டை பிடித்து வருகிறார்கள். இதனால் லைகா உச்சகட்ட விரக்தியில் இருக்கிறது.

Trending News