ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நயன்தாரா போட்ட கண்டிஷன்.. கல்யாணத்தில் கைவரிசை காட்டப் போகும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுவது தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம். பல வருடங்களாக இவர்களது திருமணம் எப்போது என்று காத்திருந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் அல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்காங்க. கிட்டத்திட்ட சினிமால 17 ஆண்டுகளுக்கு மேலாக நடிகையா வளம் வாரங்க நம்ம லேடி சூப்பர் ஸ்டார். இவங்களுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்  காதல் மலர்ந்து இப்போது திருமணத்தை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.

நானும் ரவுடிதான் என்ற படத்தில் தொடர்ந்த காதல், தற்போது திருமணத்தில் எட்டியுள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் நடக்கப்போவதாக இருந்தது, சில காரணங்களால் அது தவிரக்கபட்டு, இப்போ மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இந்த திருமணத்துக்கு முக்கிய நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண விழாவை ஒரு நேர்த்தியான படம் மாதிரி எடுத்து தருமாறு நடிகை நயன்தாரா இயக்குனர் கௌதம் வாசுதேவ் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு ஸ்டைலிஷ் அல்பமாக எடுத்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பிரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் வாங்கியுள்ளதாக நம்பத்தக்க வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வைபவத்தை ரசிகர் அனைவரும் OTT யில் பார்க்கலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News