விஜய் டிவியில் ராஜா ராணி2 சீரியலில் தன்னுடைய போலீஸ் மூளையை பயன்படுத்தி கதாநாயகி சந்தியா அவருடைய கணவர் சரவணனை தன்னம்பிக்கை உடைய மனிதராக மாற்றியது மட்டுமல்லாமல், தீவிரவாதிகளிடமிருந்து பார்வதியை மீட்டது, போலிச்சாமியாரிடமிருந்தும் ஊரையே காப்பாற்றியுள்ளார்.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சிவகாமி தன்னுடைய மருமகள் சந்தியா போலீஸ் ஆகுவதுபற்றிய முக்கிய முடிவை எடுப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இன்னிலையில் ஐபிஎஸ் தேர்வு எழுதும் சந்தியாவிற்கு ஹால்டிக்கெட் வராததால் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.
ஒருவேளை வீட்டிற்கு வந்த ஹால் டிக்கெட்டை அர்ச்சனா வாங்கி ஒழித்து வைத்திருக்கிறாரா என குடும்பத்தினர் அனைவரும் அவர்மீது சந்தேகப்படுகின்றனர். ஆனால் அர்ச்சனா அதை செய்யவில்லை என்று அடித்துக் கூறுகிறார்.
தபால் மூலம் வரும் ஹால் டிக்கெட் எங்கே போனது என அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில், சரவணன் அதை எப்படியாவது கொண்டு வர முயற்சிக்கிறார். இருப்பினும் ஹால் டிக்கெட் கிடைக்காததால் சந்தியாவை அடுத்த வருடம் ஐபிஎஸ் தேர்வு எழுதும் படி குடும்பத்தினர் சொல்கின்றனர்.
ஆனால் தேர்வு எழுதி எப்படியாவது ஐபிஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியாவிற்கு அவருடைய தோழிகள் ஆறுதல் கூறுகின்றனர். ஒருவேளை சிவகாமி அந்த ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சந்தியாவிடம் தர மறுக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனென்றால் இந்த வருடத்தில் தனக்கு பேரப் பிள்ளையை பெற்று கொடுத்துவிட்டு, அடுத்த வருடம் சந்தியாவை தேர்தல் தேர்வு எழுதிக் கொள்ளட்டும் என்று சிவகாமி சொல்லப்போகிறார். ஆனால் சரவணன் இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டார்.
எப்படியாவது போராடி சரவணன் இந்த வருடமே சந்தியாவை தேர்வை எழுத வைத்துவிடுவார். இருப்பினும் 1980-களில் தான் தபால் மூலம் ஹால் டிக்கெட் எல்லாம் வரும். இப்போது ஆன்லைன் மூலமாக எல்லாத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் போது, சந்தியாவின் ஐபிஎஸ் மூளை அப்டேட் ஆகாமல் இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.