கோலிவுட்டில் நடன் இயக்குனராக நடிகராக முத்திரை பதித்த பிரபு தேவாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் காதலன் படம் தான். கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் குறித்து இதுவரை நாம் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி காதலன் இடம்பெற்று இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பேட்டராப் பாடலை எழுதியது இயக்குனர் சங்கர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
மேலும், இந்த படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக நடிகை நக்மா நடித்திருப்பார். ஆனால் முதலில் நடிகை மாதுரி தீட்சித் தான் இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஆனால் அந்த சமயத்தில் அவரின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
அதுமட்டுமல்ல காதலன் படத்தாற்காக மிகப்பெரிய பொருட்செலவில் பேருந்து கண்ணாடி ஒன்று உருவாக்கப்பட்டு பின்னர் இந்த படத்திற்காகவே அடித்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் காதலன் படத்தில் இடம்பெற்ற முக்காபுல்லா பாடலுக்காக கவிஞர் வாலிக்கு விருது கிடைத்ததும், முதல் முறையாக முக்காபுல்லா பாடல் 3டி முறையில் உருவாக்கப்பட்டிருத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த படத்திற்காக இயக்குனர் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்ததே தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோகன் தான். ஆனால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் குஞ்சுமோகனை அரவணைக்க ஒரு கரம் கூட இல்லை.
அதனால் அவர் தற்போது தனது சொந்த முயற்சியில் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளாராம். அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்போதே 3 கோடி செலவில் எடுக்கப்பட்டது காதலன் படம். தற்போது ஷங்கர் பட்ஜெட்க்கு KT குஞ்சுமோகன் தாக்கு பிடிப்பார் என்பது சந்தேகம்தான். இதனால்தான் பட வாய்ப்பு தரவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.