புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் அமீரின் தாய்.. கதறி அழுத போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அமீர் தான் இதுவரை கடந்து வந்த பாதைகளை பற்றி தன் சக போட்டியாளர்களிடம் மிகவும் உருக்கமாக பகிர்ந்து கொண்டார்.

அவர் சிறுவயதிலிருந்து பட்ட கஷ்டங்களை விவரிக்கும் போது ராஜு, பிரியங்கா, சஞ்சீவ் உட்பட அனைவரும் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் கலகலப்பாக சுற்றிவரும் அமீருக்கு இவ்வளவு சோகமா என்று அனைவரும் வருத்தத்துடன் அமர்ந்திருந்தனர்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அமீர், தன் தாய் மற்றும் அண்ணனுடன் ஊட்டியில் வசித்துள்ளார். தன் தாய் மிகவும் கண்டிப்பானவர் என்றும் நன்றாக படிக்கவில்லை என்றால் அடி பின்னி விடுவார் என்றும் அமீர் சிரித்துக்கொண்டே கூறினார்.

சில காரணங்களால் தன் அண்ணனை விட்டுவிட்டு அமீரும் அவரின் அம்மாவும் கோயம்புத்தூரில் வந்து தங்கியுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு நாள் அமீரின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.

மறுநாள் காலையில் அமீரின் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரின் தாய் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் தலையில் தாக்கப்பட்டு அவர் இறந்திருந்தார் மேலும் அவர் உடல் முழுவதும் எறும்புகள் கடித்துக்கொண்டு இருந்ததை வேதனையுடன் அவர் கூறினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்த அமீருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அமீரின் அம்மாவை கொலை செய்த அந்த கொலையாளி போலீஸ் ஸ்டேஷனில் இருந்துள்ளார். மேலும் அந்த நபர் அமீரின் அம்மாவை எப்படி கொலை செய்தேன் என்று விவரித்துள்ளார். அமீர் இதை தாங்க முடியாத வேதனையுடன் போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அவர் தன் தாயை எதற்கு அந்த கொலையாளி கொலை செய்தான் என்ற விவரத்தை போட்டியாளர்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு வழியாக மீண்டு மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு தான் வந்துள்ளதாக அவர் கூறினார்.

நான் பெரிய டான்ஸராக வேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் மிகப்பெரிய கனவு. இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் அதை காண என் அம்மா என்னுடன் இல்லை என்று அழுதபடி அமீர் கூறியது அனைவரையும் கண் கலங்க வைத்தது.

amir-mom
amir-mom

அமீர் தன் சோகக் கதையைக் கூறி முடித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் ஓடிச்சென்று அவரை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினர். அதன் பிறகு சில நேரம் பிக்பாஸ் வீட்டில் பெரும் அமைதி நிலவியது. அமீரின் இந்த சோக கதையை கேட்ட ரசிகர்கள் அனைவரும் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Trending News