புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கார்த்தியால தான் அந்த படம் ஓடல.. பிக்பாஸ் பிரபலம் கூட்டிய ஏழரை

Actor Karthi: கார்த்தி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து அசத்தி விடுவார். அதில் வில்லேஜ் கேரக்டர் அவருக்கு பக்காவாக பொருந்தி போகும். இப்படி முயற்சி செய்து நடித்தும் கூட சில படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது.

அப்படி அவருடைய 25வது படம் என்ற பெருமையோடு வெளியானது தான் ஜப்பான். இதன் இசை வெளியீட்டு விழாவே மிகப் பிரமாண்டமாக நடந்தது. ஆனாலும் படம் தோல்வியை தான் தழுவியது.

அதுவும் சாதாரணமான தோல்வி கிடையாது. அவருடைய கேரியரிலேயே மோசமான ஃப்ளாப் இப்படம் தான். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை கொடுத்த ராஜூ முருகன் படமா இது என்ற விமர்சனங்களும் இருந்தது.

பிக்பாஸ் பிரபலம் கூட்டிய ஏழரை

அந்த அளவுக்கு படத்தின் மேக்கிங், இசை, திரைக்கதை என எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. அதனாலேயே படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் கார்த்தி தான் என பவா செல்லதுரை குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய இவர் அவ்வப்போது சில சர்ச்சை கருத்துக்களையும் வெளியிடுவார். அப்படித்தான் தற்போது ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தியை கைகாட்டி இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது நான் ஜப்பான் படத்தில் நடித்திருந்தேன். அப்படம் சரியாக போகவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையில் இப்படம் நன்றாக ஓடியிருக்க வேண்டியது.

ஆனால் படத்தில் டார்க் ஹியூமர் காட்சிகள் எல்லாம் சீரியஸாக போய்விட்டது. ஒருவேளை படம் ஹீரோவிடம் இல்லாமல் இயக்குனர் கையில் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

இப்போதெல்லாம் படத்தில் மற்றவர்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது. ஹீரோ ஒன்று சொல்கிறார். தயாரிப்பாளர் ஒன்று சொல்கிறார். அதனால் படத்தின் கதை ட்ராக் மாறிவிடுகிறது.

இப்படி ஒவ்வொருவருக்காகவும் கதையை மாற்றினால் இயக்குனர் நினைத்தபடி படம் வராது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் படத்தில் கார்த்தியின் தலையீடு அதிகம் இருந்தது என அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

தற்போது ஹீரோக்கள் பற்றி இப்படிப்பட்ட புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் பவா செல்லதுரை கார்த்தியை பற்றி கூறியிருப்பது புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

Trending News