புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர மொக்கையாக போகும் பிக் பாஸ் சீசன் 6.. சாட்டையுடன் என்ட்ரி கொடுக்க போகும் ஆண்டவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு கோபத்தையும், வெறுப்பையும் கொடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் எந்நேரமும் போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டு சண்டை போடுவதை பார்த்து பலருக்கும் மன உளைச்சல் ஆகிறது.

அதனாலேயே இந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே சில ரசிகர்கள் விட்டு விட்டனர். அந்த அளவுக்கு சூர மொக்கையாக போய்க் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி எப்போது முடியும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் போன வாரத்தை விட இந்த வார நிகழ்ச்சி படு மோசமாக போய்க்கொண்டிருக்கிறது.

Also read: வீட்டுக்குள்ள பத்தாதுன்னு வீதியிலும் வெடிக்கப் போகும் சக்காளத்தி சண்டை.. பாக்கியாவுக்கு எதிராக வில்லியாக மாறும் ராதிகா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் ரசிகர்கள் சினிமாவில் பார்த்து ரசித்த ஒரு கேரக்டராக மாறி பர்பாமன்ஸ் செய்து வருகின்றனர். ஆனால் இது ரசிகர்களை கவர்வதற்கு பதிலாக சோதிக்காதிங்கடா எங்கள என்று புலம்பும் அளவுக்கு வைத்துவிட்டது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பியும் வெகுவாக குறைந்து இருக்கிறது.

இதனால் விஜய் டிவி பார்வையாளர்களை கவர்வதற்காக ஒரு பிளான் போட்டு உள்ளது. அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் கமல் செல்ல இருக்கிறார். ஏற்கனவே சென்ற வாரம் ஆண்டவர் போட்டியாளர்களிடம் நிகழ்ச்சி எந்த அளவுக்கு மொக்கையாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நாசுக்காக தெரிவித்தார்.

Also read: சொன்ன மாதிரி மகளா தத்தெடுத்துட்டாரோ? வெளியேறிய குயின்ஸியை முத்தமிட்டு ராபர்ட் மாஸ்டரின் புகைப்படம்

அதைக் கேட்டாவது போட்டியாளர்கள் சுவாரஸ்யமான கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அதிலும் எடிட் செய்து வரும் ஒரு மணி நேர காட்சியிலேயே சிரிப்பது, கொட்டாவி விடுவது போன்ற காட்சிகளை காட்டி ஒப்பேற்றி விடுகின்றனர். இதற்கு நிகழ்ச்சியின் நடுவில் வரும் விளம்பர இடைவேளையே தேவலாம் போல இருக்கிறது.

அதன் காரணமாகவே இப்போது ஆண்டவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சாட்டையுடன் சென்று போட்டியாளர்களை ஒரு வழி செய்ய இருக்கிறார். வாராவாரம் கமலிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் போட்டியாளர்கள் இப்போது நேரடியாக அவருடைய ருத்ரதாண்டவத்தை பார்க்க இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வார நிகழ்ச்சி ரசிகர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: ஆண்மையே இல்லை எப்படி 2 குழந்தை பெத்துக்க முடியும்.. வெண்பா கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன பாரதி

Trending News