புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாட்டிலால் தலையில் அடித்தார்.. நடுரோட்டில் வைத்து என்னை.. பிக் பாஸ் சவுந்தர்யா வாழ்வின் கருப்பு பக்கங்கள்

பிக் பாஸ் சவுந்தர்யா.. இவருக்கு ஆண்கள் கண்டிப்பாக சீக்கிரம் ஆர்மி ஸ்டார்ட் பண்ணி விடுவார்கள் போல.. அந்த அளவிற்கு கொள்ளை அழகு என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் ஆரம்பித்து 2 வாரங்கள் ஆகப்போகிறது. இந்த நிலையில், இது வரை இவர் பெரிதாக எந்த கன்டென்ட்டும் கொடுக்கவில்லை..

Eat 5 star Do nothing என்று தான் இருக்கிறார். அந்த வகையில் பலரும் இவரை ட்ரோல் செய்தும் வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் ‘வேற மாறி ஆபிஸ்’ எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

அந்த சீரிஸ் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியு இவர், தனது முன்னாள் காதலர் குறித்து பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். இது பலருக்கு இவர் மீது இரக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

என்னை நடுரோட்டில் வைத்து..

பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் போது காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம். கல்லூரி வரை இருவரும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படித்து வந்த நேரத்தில் தான், சௌந்தர்யா மாடலின் துறையில் என்ட்ரி ஆகியுள்ளார்.

அது அவருடைய காதலருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் தனது காதலருக்கு தெரியாமல் மாடலின் போட்டோஷூட் புகைப்படங்களை போனில் ஹைட் பண்ணி வைத்திருப்பாராம். அதை அவருடைய காதலர் ஒரு முறை பார்த்துவிட்டதால், நடு ரோட்டில் சௌந்தர்யாவை அடித்தாராம். அதுமட்டுமின்றி பல முறை தன்னை அடித்ததாக சௌந்தர்யா கூறியுள்ளார். ஒரு முறை சாஸ் பாட்டில் வைத்து தலையில் அடித்தாராம்.

இத்தனை கஷ்டங்களையும் தங்கியுள்ளார். பொதுவாக இப்படி தான் பல ஆண்கள், காதல் என்ற பெயரில் மிருகம் போல் நடந்து கொள்வார்கள். கேட்டாள், இது தான் தெய்வீக காதல் என்று வசனம் பேசுவார்கள். அப்படி பேசும் பல ஆண்களில் சவுந்தர்யாவின் முன்னாள் காதலரும் ஒருவர்.

Trending News