செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பிக்பாஸ், சர்வைவர் நிகழ்ச்சியில் 3 முரட்டு நண்பர்களை களமிறங்கிய யாஷிகா.. பெரிய பார்ட்டி தான்

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நன்கு பிரபலம் அடைந்து விட்டார். இவரை தொடர்ந்து, இவரின் நெருங்கிய நண்பர் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சென்ற சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அத்துடன் சென்ற சீசனில் இவரே ரன்னர் அப் ஆகியுள்ளார். ஆனால் இவரால் சென்ற சீசனில் பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் இவரை வைத்து பிக்பாஸ் குழுவினர் தங்களது டிஆர்பி ரேட்டிங்கை நன்கு உயர்த்திக் கொண்டனர். தற்போது பிக்பாஸ் சீசன் 5 இல் நடிகை யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலனை போட்டியாளராக தேர்வு செய்துள்ளனர். அந்த போட்டியாளர் நிரூப். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் நடிகை யாஷிகா ஆனந்தை, நிரூப் நேரலையில் முத்தமிட வீடியோ வைரலாகி பரவியது.

தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நிரூப் மிகவும் வெளிப்படையாக தனது மனதில் இருக்கக்கூடிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது தன்னுடைய வாழ்க்கையை துவங்கி வைத்தவரே யாஷிகா தான் என்றும், தனது வெற்றிக்கு யாஷிகா தான் காரணம் என்றும் தற்போது தான் யாஷிகாவின் முன்னாள் காதலனாகி விட்டதாகவும் ஓபனாக பேசிய நிரூப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

bb5-niroop-cinemapettai
bb5-niroop-cinemapettai

மேலும், சென்ற சீசனில் யாஷிகாவின் நண்பர் பாலா, பிக் பாஸின் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது இந்த சீசனில் யாஷிகாவின் முன்னாள் காதலர் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.

இதனால் நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆள் சேர்த்துவிட்டு கமிஷன் பார்ப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமன்றி ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சிக்கும் ஆள் சேர்த்துவிடுகிறார் போல.

ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வரும் உமாபதி, நடிகை யாஷிகா ஆனந்தின் மற்றொரு நண்பராம். இவ்வாறு ஆட்களை அடையாளம் காட்டி வரும் நடிகை யாஷிகா ஆனந்த் பெரிய பார்ட்டி தான்ப்பா என்று நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

survivor-uma-cinemapettai
survivor-uma-cinemapettai

Trending News